பக்கம்:பாரதித் தமிழ்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 பாரதி தமிழ்

வாஸ்தவந்தான்! ஆனால், முன்பு, கட்டாய ராணுவ லேவக முறைமையை ஐரிஷ் கத்தோலிக்க குருக்கள் எதிர்த்த காலத்தில் அவர்களுக்கு ஸர். ஹாமர் க்ரீன்வுட் எவ்வளவு தூரம் ஆமோதிப்பும் உதவியும் செய்தாரென்ற விஷயத்தை நாம் சற்றே தெரிந்து கொள்ள விரும்புகிருேம். மேலும், இங்ஙனம் ஜனங் களிடமிருந்து பறித்துக்கொண்ட ஆயுதங்களே அந்த குருக்கள் அப்பால் கடலில் எறிந்துவிட வேண்டுமா? அல்லது ஆலயங்களிலேயே வைத்துப் பூஜை செய்ய வேண்டுமா, அல்லது அவற்றை ஆங்கிலேயப் போலிஸாரிடமும் சிப்பாய்களிடமும் ஒப்புவித்து ஐரிஷ் ஜனங்களையே வேட்டையாடும்படி கேட்டுக் கொள்ள வேண்டுமா என்ற விஷயத்தில் மந்திரி க்ரீன்வுட் தம்முடைய அபிப்பிராயத்தைத் தெரிவிக் காமல் இருந்தது பற்றி வருத்தப்படுகிறேன்.

2. மிகவும் நன்றி தெரிவிக்கிருேம்!

சென்ற நவம்பர் 25-ந்தேதி யன்று, மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் ஐர்லாந்தில் ராணுவச் சட்ட மேற் படுத்துதல் இப்போது விரும்பத்தக்கதன் றென்ப தாகவே மந்திரி ஸ்பையார் முடிவாகத் தீர்மானம் செய்து விட்டன. ரென்றும், அது விரும்பத்தக்க தாகவும் பயனளிக்கத் தக்கதாகவும் தோன்றிய வுடனே கவர்ன்மெண்டார் அதைப் பிரயோகம் செய்து விடுவார்களென்றும் அறிவித்தார். இந்த தயவின் பொருட்டு மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜுக்கும் ப்ரிடிஷ் மந்திரி ஸ்பையாருக்கும் ஐர்லாந்து வா களும், உலகத்தாரும், மிகமிக நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறார்களென்பதில் ஸ்ந்தேஹ மில்லை. ஆனல் தாமரைப் பூவைச் சித்தரிப்பதும் தங்கத்திலே தங்க முலாம் பூசுவதும் மிகையாகு மென்று ஆங்கிலேயே மஹா கவியாகிய ஷேக்ஸ்பியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/381&oldid=605782" இலிருந்து மீள்விக்கப்பட்டது