பக்கம்:பாரதித் தமிழ்.pdf/383

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


384 பாரதி தமிழ்

ராஜாங்கக் கொள்கைகள் இங்கிலாந்தில் பரவு வதற்கு வியாபார சம்பந்தங்கள் ஸாதனமாகக் கூடுமென்று இங்கிலாந்திலுள்ள பழங் ககதியார் அஞ்சுகிரு.ர்கள். என்ன செய்யலாம்?. லண்டன் “டைம்ஸ்’ பத்திராதிபருக்கு ஸம்மத மில்லாத கொள்கைகள் இங்கிலாந்தில் புகாதபடி தடுப்பதற் காக: ப்ரிடிஷ் ஜனங்கள் ஒரு மகத்தான தேசத் துடன் வியாபாரம் செய்வதால் நேரும் லெளகரியங் களை எத்தனை காலம் நிறுத்தி வைக்க உடம்படுவார் கள்? ஆங்கில கவர்ன்மென்டார் ருஷியாவுடன் வியாபார சம்பந்தங்கள் தொடங்கும்படி ஆங்கில ஜனங்களுக்கு அனுமதி கொடுத்தவுடனே நம்மு டைய இந்திய கவர்ன்மெண்டாரும் இங்குள்ள வியாபாரிகளுக்கும் அதே அனுமதி கொடுப்பார்க ளென்று நம்புகிறேன். அதன் மூலமாக ருஷியக் கொள்கைகள் இந்தியாவிலும் பரவிவிடக் கூடு மென்று அஞ்சுவோர் யாரேனுமிருப்பாராயின், அந்த அச்சம் அநாவசிய மென்றும் ஆதலால் அதனை விட்டொழித்து விடவேண்டு மென்றும் அவர்களுக்கு நான் விண்ணப்பம் செய்து கொள்ளு கிறேன். ருஷியக் கொள்கைகள் ருஷிய வியாபார ஸம்பந்தங்களால் ஒருவேளை இங்கு பரவுமிடத்தே அவற்றை எதி. த்தடித்து வேலை செய்ய நம்முடைய இந்திய கவர்ன்மெண்டாரிடமுள்ள பப்ளிஸிடி பீரோ என்ற விளம்பர ஸ்பையாரால் முடியாதா? நாமேன் வீணுகப் பபப்பட வேண்டும்?

4. விளம்பரசபை'யின் தமிழ்

ராஜாங்கத்தாரால் நியமிக்கப் பட்டிருக்கும் விளம்பர ஸ்பையார் பத்திரிகை படிப்போருக்காக வும், பொது ஜனங்களுக்காகவும், அடிக்கடி துண் டுப் பத்திரிகைகள் முதலியன ப்ரசுரம் செய்து