பக்கம்:பாரதித் தமிழ்.pdf/384

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விகோத விஷயங்கள் 385

வருதல் நேசர்களுக்குத் தெரிந்த செய்தியேயாம். ஆனல் இந்த ஸ்பையாரின் ப்ரசுரங்களில் உள்ள இலக்கணத் தவறுகளுக்கும், பிரயோகத் தவறு களுக்கும் கணக்கேயில்லை. தமிழ் பாஷையில் வெளி வரும் ப்ரசுரங்ளைப் பற்றி மாத்திரம் நான் இங்கு பேசுகிறேன். பெரும்பாலும், மற்ற தேச பாஷை களிலும் இதே மாதிரியாகத்தான் இருக்கக் கூடு மென்று ஸம்சயிக்கிறேன்.

பொதுவாக ராஜாங்கத்தாரின் கெஜட்டுகள், நியாய ஸ்தல மொழி பெயர்ப்புகள் முதலிய முக்ய மான தமிழ் ப்ரசுரங்களில் வழுக்கள் நிறைந்த தாய், ஸாதரணத் தமிழருக்கர்த்தமாக வழியில்லாத தமிழ் பாஷையே வழங்கி வருதல் ப்ரளித்தம். எனினும் ஜனங்களுக்கர்த்தந் தெரியாமல் “கெஜட்!” வர்த்த மானங்கள் ப்ரசுரிப்பதைக் காட்டிலும், கrதிப் பிரதி கசுதிகளும், தர்க்கங்களும் நடத்தி ஜனங்களுக்கு அபிப்பிராய மாறுதலுண்டாகும்படி சர்க்கார் வக்கீல் வேலை செய்ய வந்த இடத்தில் ஜனங்களுக்கு விளங்காத, இலக்கணத் தவறுகள் நிறைந்த பாஷையை வழங்குதல், நூறு மடங்கு அதிகப் பரிஹாஸ்த்துக் கிடமாகுமென்பதை ராஜாங்கத் தாருக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

5. ஸின்பீன்” வேட்டை

ஐர்லாந்தில் இப்போது குடியரசு முறையைக் கைக்கொண்டிருக்கும் ஸின்பீன்” என்ற ஸ்வா தீனக் கrயாரை ஐரிஷ் அதிகாரிகள் வெகு கோலா ஹலமாக வேட்டையாடி வருகிரு.ர்கள். வழக்கம் போலவே, கொலை செய்த குற்றவாளிகள் ஒரு புறமிருக்க, அந்தக் கொலைகளைத் தம் உபதேச முதலியவற்றால் தூண்டியதாகக் கருதப்படும் ஜனத் தலைவர்களைப் பிடித்தடைப்பது மிகவும் எளிதாத

பா. த.-25