பக்கம்:பாரதித் தமிழ்.pdf/385

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


386 பாரதி தமிழ்

லால், ஐரிஷ் அதிகாரிகள் இத்தலைவர்களை மிகவும் சுறுசுறுப்பாகக் கைதி செய்யத் தொடங்கிவிட்டனர். ஐரிஷ் குடியரசுத் தலைவரான மிஸ்டர் டிவலேரா அமெரிக்காவிலிருப்பதால், அவருக்குப் பிரதியாக ஐரிஷ் குடியரசின் ஜனதிபதி ஸ்தானத்தை வகித்து வரும் மிஸ்டர் ஆர்தர் க்ரிபித் என்பவர் சென்ற வெள்ளிக்கிழமை (26-நவம்பர்) கைதி செய்யப் பட்டார். இவர் ப்ரிட்டிஷ் காமன்ஸ் ஸ்பை மெம்பர் களில் ஒருவர். மறுநாள், நவம்பர் 27-ஆந் தேதி யன்றைக்கும், அதற்கடுத்த 28-ஆந் தேதியிலும் மிஸ்டர் ஆர்தர் க்ரிபித் ஐரிஷ் நிலைமையைக் குறித்து மாஞ்செஸ்டர் நகரத்தில் உபந்யாலங்கள் செய்யப் போவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங் ங்னம் அவரைப் பேசவிட்டால் அதினின்றும் ஜனங் களுக்குள் ராஜாங்கத் துவேஷம் பரவக்கூடும் என்று சொல்லி உள்நாட்டு மந்திரி அந்த உபந்யாஸங்களைத் தடுத்துவிட்டார். அதனையடுத்து மிஸ்டர் க்ரிபித் தைச் சிறைப்படுத்தவும் செய்திருக்கிறார்கள்.இவரை யன்றி வேறிரண்டு பார்லிமெண்ட் மெம்பர்களும், ஒரு உபாத்யாயரும் உட்பட்ட மற்றுஞ் சில வின்பின் தலைவர்களையும் பிடித் து வைத்திருக்கிறார்கள். மிஸ்டர் ஆர்தர் க்ரிபித்தை ஜனங்களுக்குத் தெரி யாமல் எங்கேயோ ரஹஸ்யமாகக் கொண்டுபோய் வைத்திருப்பதாகத் தெரிகிறது. இங்ஙனம் மிஸ்டர் க்ரிபித்தை இங்கிலாந்தில் பிடித்ததற்கு முகாந்தரங் கூறுமிடத்தே டப்ளின் நகரத்தில் அவருடைய வீட்டைப் போலீஸார் சோதனையிட்டதாகவும் அப் போது மேலும் ஆராய்ச்சி நடத்துவதற்கிடமான சில முக்யக் காயிதங்கள் போலீஸார் வசம் கிடைத்த தாகவும் அந்த ஆராய்ச்சி முடிவுவரை அவ்ரை அடைத்து வைத்திருக்கப் போவதாகவும், மந்திரி ஹாமர் க்ரீன்வுட் சொன்னர். ஆனால், அதே காலத்தில் “லின்பீன் ககதிய்ார் தாங்கள் இங்கி