பக்கம்:பாரதித் தமிழ்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 பாரதி தமிழ்

ருக்கு விரோதமாக ப்ரிட்டிஷ் ஏகாதிபத்யம் யுத்தம் செய்யப் புறப்பட்டிருக்கிறதென்றால், இது கேட் போருக்கு நகை விளைவிப்பதொரு செய்கையன்றாே ?

6. காலத்தின் மாறுதல்

சென்ற ஐந்து மாலங்களுக்குள்ளே ஜெர்மனியி லிருந்து 6 லக்ஷம் கடிகாரங்களும், எழுபத்திராயிரம் ஸங்கீத வாத்யங்களும், மாஸந்தோறும் ஆயிரம் மோட்டார் வண்டிகளும், பதியிைரம் காலன் ஜெர்மன் ‘சாராயங்களும் இங்கிலாந்துக்கு இறக்கு மதியாயிருப்பதாகவும், இன்னும் இவ்வருஷத்துக் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னே சுமார் பத்து லக்ஷம் பவுன் கிரயமுள்ள விளையாட்டு ஸாமான்கள் இறக்குமதியாகப் போவதாகவும் ராய்ட்டர் தந்தி தெரிவிக்கிறது. ஜெர்மனி இன்னும் உடன்படிக் கையின் நிபந்தன்ைக்ளை முற்றிலும் நிறைவேற்றாத படியால் அந்நாட்டை இப்போது ஸர்வதேச ஸங் கத்தில் சேர்க்கப் போவதில்லை யென்று மற்றாெரு தந்தி சொல்லுகிறது. அதற்குள் ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் இத்தனை நெருங்கிய வியாபார ஸம்பந்தங்கள் ஏற்பட்டுவிட்டன. உலக முடிவுவரை அல்லது யுத்தம் முடிந்து நெடுங் காலம்வரை மானிட ராக்ஷஸ்ராகிய ஜெர்மனியருடன் எவ்விதமான உறவுகளும் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாதென்றும், அவர்களிடம் ஸாதாரண மனித பாவனை செலுத் தாமல் ஸ்கல விதங்களிலும் அவர்களை பஹிஷ்காரம் செய்ய வேண்டுமென்றும் மஹாயுத்தம் நடக்கும் போதெல்லாம் கூக்குரலிட்டுக் கொண்டிருந்த ஆங்கிலப் பத்திராதிபப் புலிகள் முதலியோர் இப் போது இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் ஏற்பட் டிருக்கும் நெருங்கிய வியாபார ஸம்பந்தங்கள் முதலியனவற்றைப்பற்றி என்ன நினைக்கிறார்களென் றறிய இச்சைப் படுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/387&oldid=605790" இலிருந்து மீள்விக்கப்பட்டது