பக்கம்:பாரதித் தமிழ்.pdf/391

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


392 பாரதி தமிழ்

பக்கத்திலும் அதன் வலை போன்ற பாதங்களினடி யிலும் இரத்தச் செம்மை கொண்ட புள்ளிகள் தோன்றுகின்றன. இதைத் திடுக்கிடச் செய்யும் போதும், கோபமூட்டிய இடத்தும் அப்படியே மல் லாந்து படுத்துக்கொண்டு யோகம் ஸாதிக்கிறது. அப்போது செத்ததாக நடிக்கிறது. அல்லது ‘னச் சரிக்கை வர்ணங்களைப் புல்ப்படுத்துகிறது. இதில் ஆண்பால் பெண்பால் இரண்டும் குட்டி வளர்க்கும் பருவங்களில் உரத்த குரலில் பாடுகின்றன. அந்தப் பாட்டின் ஒலி ப்ரிட்டிஷ் க்ரீன் பிஞ்ச் பகயிென் குரலைப் போலவேயிருப்பதாகத் தெரிவிக்கப்படு கிறது.

4. ஸய்யிது துறைமுகத்தில் (போர்ட் ஸயிது) போல்ஷவிக் உபத்சவங்கள்

சென்ற அக்டோபர் மாஸ் முடிவில் ஸ்லியேஸ் கால்வாய்க்கு வட புறத்தேயுள்ள ஸய்யிது துறை முகத்தில், பலமான தொழிற் கலகங்கள் நேரிட்ட தாக லண்டன் டைம்ஸ் ப்த்திரிகைக்கு ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. ஸ அயேஸ் வாய்க்கால் வேலை யாட்களேத் தொழில் நிறுத்தும்படி கலகக்காரர் தூண்டியும் அது பலிக்கவில்லை யென்று தெரிகிறது. இவ்வாறு பலிக்காமற் போனதன் காரணம் அந்த வேலையாட்களின் சம்பளங்களில் கம்பெனியார் தக்க படி மிகுதி செய்து கொடுத்திருப்பதேயாம். ஆனல் வேறு சில தொழிலாளிகள் (அக்டோபர் முடிவில்) இன்னும் தொழில் நிறுத்திய நிலைமையிலேதான் இருந்தனராம். எ கி ப் தி ன் பட்டாளமொன்று ஸய்யிது துறைமுகத்துக்கு வந்திருக்கிறது. கலகக் காரர் சிறைச் சாலையை உடைக்க முயன்றார்களாம். இ ங் ங் ன ம் அவ்விடத்தில் குழப்பமேற்பட்டிருப்