பக்கம்:பாரதித் தமிழ்.pdf/392

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலக விநோதங்கள் 393

பதற்கு போல்ஷவிக்கரின் சேஷ்டைகளே முக்யக் காரணமெனினும், அந்தத் துறைமுகத்தில் வ்ழங்கப் படும் “ப்ரான்’ (Franc) என்ற ப்ரெஞ்ச் நாணயத் திற்கு விலை மதிப்புக் குறைவு நேர்ந்திருத்தலும் ஒரு வாறு காரணமாகும்ென்று, லண்டன் டைம்ஸ்” சொல்லுகிறது. இந்த நாணயத்திலேயே அங்குள்ள வியாபார ஸ்தலத் தலைவர் தங்கள் வேலையாட்களுக் கெல்லாம் சம்பளம் கொடுக்கும் வழக்கம் இருப்ப தாகத் தெரிகிறது.

5. ஸ்வராஜ்யம் வேண்டும்

தேசியக் ககதித் தலைவராக இருந்து அரிய வேலை செய்த ஒரு வடநாட்டு வக்கீல், பின்னிட்டுப் பல வேறு காரணங்களைக் கருதி ஸர்க்கார் ககதியுடன் பழகத் தொடங்கித் தம்முடைய ஸ்வதேசிய முயற்சி களைச் சிறிது சிறிதாகத் தளரவிட்டு வந்தார்.

அன்பு மேலிட்டு, உயர்தர ப்ரிடிஷ் அதிகாரி யொருவர் அத்தலைவரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தார். அத் தலைவருக்கு ஏறக்குறைய எட்டு வயதுள்ள பெண் குழந்தை யொன்றிருந்தது. அந்தக் குழந்தை தன் வீட்டில் தான் பிறந்து அறிவு தெரிந்த பிராய முதலாகவே ஸ்வராஜ்யத்தைப் பற்றி ஓயாமல் கேட்டுப் பழகியிருந்தபடியால் அதற்கு ஆங்கிலேயரிடமிருந்து நாம் ஸ்வராஜ்ய மடைய வேண்டுமென்ற எண்ணம் பலமாக ஏற்பட் டிருந்தது. ஒருநாள், மேற்கூறிய ப்ரிடிஷ் அதிகாரி அத்தலைவரின் வீட்டுக்கு வந்திருந்தபோது, அக் குழந்தையிடம் வேடிக்கையாக ஸ ம் பா ஷ னை செய்யத் தொடங்கினர். அந்தக் குழந்தை மிகவும் ஸாமர்த்தியமாக மறுமொழி சொல்லிக் கொண்டு வந்தது. இந்தக் குழந்தைக்கு ஏதேனும் ஸம்மானம் கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் ப்ரிடிஷ் அதி