பக்கம்:பாரதித் தமிழ்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 பாரதி தமிழ்

வியாபார மந்திரி என்போருட்பட்ட ராஜாங்கத் துாதர் கணமொன்று கான்ஸ்டாண்டி நோபிளி லிருந்து புறப்பட்டுக் கமால் பாஷாவின் கூட்டத்தா ருடன் உடன்படிக்கைப் பேச்சுக்கள் பேசும் பொருட் டுக் கமால்பாஷாவின் ஸ்தானமாகிய (ஆசியா மைனரிலுள்ள) அங்கோரா நகரத்துக்குப் போய்க் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இப்போதேனும், துருக்கி கவர்மெண்டார் உள்ளொற்றுமையை நாடி வேலை செய்வது துருக்கிக்கு நற்காலத்தைக் குறிப்ப தாகவே கொள்ளவேண்டும்.

2. சிறிய ராஜ்யங்களுக்கெல்லாம் சுயேச்சையும் சுயநிர்ணயமும்!

சுயேச்சையும் சுயநிர்ணயமும் இல்லாத சிறிய ராஜ்யங்களுக்கு, அவற்றை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டே ஐரோப்பாவில் நான்கு வருஷங்கள் மஹாயுத்தம் நடத்துவ்தாக ஐரோப்பிய ராஜ்ய தந்திரிகள் பல்லவி பாடிக் கொண்டிருந்தார்கள். ஆனல் மேற்படி மஹா பிரளயத்தின் தற்கால விளைவு களை மாத்திரம் பார்க்கும்போது, ஏற்கெனவே சுய நிர்ணய அதிகாரம் வைத்துக்கொண்டிருந்த் தேசங் களுக்குக்கூட இப்போது அவ்வுரிமை மறுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய ராய்ட்டர் தந்தி யான்றில், கிரேக்க ராஜாங்கத்தார்.சிறிது காலத்துக்கு முன்பு இருபது கோடியே இருபது லக்ஷம் த்ராக்மா (என்ற கிரேக்க நாணயம்) தங்கள் நாணய சாலைகளில் அச் சிட்டதுபற்றி நேசக் ககதியார் ஆக்ஷேபந் தெரிவித் திருக்கிறார்களென்றும், அக்கார்யம் செய்யும் முன்பு கிரேக்க ராஜாங்கத்தார் நேசக் கrயாரிடமிருந்து அநுமதி பெற்றுக் கொண்டிருக்க வேண்டுமென அறிக்கையிட் டிருக்கிறார்களென்றும் சொல்லப்படு கிறது. நல்ல வேலை ஒரு தனி ராஜாங்கத்தார் தங்களிஷ்டப்படி நாணயமடித்துக் கொள்ளவுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/395&oldid=605803" இலிருந்து மீள்விக்கப்பட்டது