பக்கம்:பாரதித் தமிழ்.pdf/399

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


400 பாரதி தமிழ்

தேச ஸேவையைத் துறந்து விட்டார்களென்றும், இனி இளைஞர்கள் காப்பாற்றினலன்றி தேசம் கதி யற்றதாய் விடுமென்றும் தெரிவித்தார். காந்தி சிறு பிள்ளையா? விஜய்ராகவாச்சார்யர் சிறு பிள் ளையா? மதிபால் கோஷ் சிறு பிள்ளையா? மதன் மோஹன மாளவியா சிறு பிள்ளையா? நம்முள் வய தேறியவர்கள் தேச பக்தியைத் துறந்து விட்டதாக மேற் கூறப்பட்ட மஹான்கள் இருக்கும்வரை நாம் உச்சரிப்பது சரியா? இந்தியாவின் விருத்தத் தலைவர் களுக்கு யெளவன இந்தியர் செலுத்தும் நன்றி இது தான?

2. ஐரோப்பிய நாகரிகம்

ஐரோப்பிய நாகரிகத்தைக் குறித்துத் தம்மு டைய கல்கத்தா உபந்யாஸ்மொன்றில் கர்னல் வெட்ஜ்வுட் பேசிய வார்த்தைகள் படிப்பதற்கு ரஸ்மாக இருப்பதால் அவற்றை இங்கு மொழி. பெயர்த்துக் காட்டுகிறேன். கர்னல் வெட்ஜ்வுட் சொல்லுகிறார்:

“ஐரோப்பிய நாகரிகம் இந்தியாவில் வந்து தங்கிப் போய்விடும் என்று தோன்றுகிறது. அதைத் தடுக்க வேண்டும். அந்த நாகரிகம் அநியாயத்தை அஸ்திவாரவாக உடையது. அது யோக்கியதை யற்ற பொருளாசையை ஆதாரமாகக் கொண்டது. அந்த நாகரிகத்தை நீங்கள் கைக்கொள்ள மாட்டீர் களென்று நம்புகிறேன். அது அநீதியை ஆதாரமாகக் கொண்ட் தென்பதற்குக் காரணம் சொல்லுகிறேன். தொழிலாளிகள் செல்வத்தை உற்பத்தி செய்கிறார் கள். ஆனல் அவர்களுடைய தொழிலால் உற்பத்தி யாகும் செல்வத்தை அவர்கள் அனுபவிக்க இட மில்லை. இது அநியாயமன்றாே? நீதியை ஆதார மாகக் கொள்ளாமல் அநீதியை ஆதாரமாகக்