பக்கம்:பாரதித் தமிழ்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பாரதி தமிழ்

திருமதி தங்கம்மாள் ப ா ர தி எழுதுகிரு.ர்கள் (பா தியும்'கவிதையும் பக். 58.).

“1908-ஆம் ஆண்டில் பாரதியார் இந்தியா பத் திரிகையைப் புதுவை மிஸியோம் எத்திரான் ழேர் வீதியிலிருந்து நடத்தி வ்ந்தார். 1910-ஆம் ஆண்டில் அச்சுக்கூடத்தை டுப்ளே வீதிக்கு மாற்றிக் கொண் டார்’ (திரு. ரா. கனகலிங்கம்-பாரதியாரின் புதுவை வாழ்வு என்ற கட்டுரை). 1910-மார்ச் 12-ஆம் தேதி வரையில் இந்தியா புதுச்சேரியில் நடந்து வந்தது. பொருள் நெருக்கடி ஒரு பக்கம். அரசாங்கத்தாரின் கோபம் ஒரு பக்கம். இந்த நிலையிலே தமிழ் நாட் டாரின் ஆதரவு புதுச்சேரிக்கு எட்டுவதிலும் எவ் வளவோ சிரமமிருந்தது. மேலும் இந்தியா பத் திரிகை பிரிட்டிஷ் இந்தியாவிற்குள் வரக்கூடா தென்று 1908-ஆம் ஆண்டில் அரசாங்கம் தடை விதித்தது. மற்றக் கர்ரண்ங்களைவிட அதுவே இப் பத்திரிகையின் ஆயுளை ஒரேயடியில் போக்கிவிட்ட தென்று கூறலாம்.

மாணிக்டோலா வெடிகுண்டு வீச்சு சம்பந்த மாக பூரீ அரவிந்தர்பேரில் வழக்குத் தொடரப்பட் டிருந்தது. அதில் அவர் விடுதலையடைந்தார். பிறகு அவர் கர்மயோகின் என்ற ஆங்கிலப் பத்திரிகையைக் கல்கத்தாவிலிருந்து கொஞ்சகாலம் நடத்தி வ்ந்தார். அந்தப் பத்திரிகையைத் தழுவிக் கர்மயோகி என்ற பத்திரிகையைப் பாரதிய்ார் புதுச்சேரியில் தொடங் கினர்.

இந்தியா வார இதழ் சென்னையில் நின்றதும் அந்தக் குறையைப் போக்குவதற்காக மண்டயம் பரீநிவாஸாச்சாரியாரின் சொந்தத் தமையனரான எஸ். திருமலாச்சாரியார் விஜயா என்ற தமிழ்த் தினசரிப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கினர். இது திருவல்லிக்கேணி ஹைரோடிலிருந்து வெளியாயிற்று.