பக்கம்:பாரதித் தமிழ்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக விநோதங்கள் 403

ஒளியைக் காண்பித்தால் இருள் தானே அகன்று விடும். மேற்றிசையின் அநாகரிகத்தை மாற்ற வேண்டுமாயின், கீழ்த்திசை நாகரிகம் அங்கு பரவும் படி செய்வதே அதற்குரிய உபாயமாகும். கீழ்த்திசை நாகரிகத்துக்கு இந்தியாவே இலக்கியமாக விளங்கு கிறது. எனவே உண்மையான கிழக்கு நாகரிகம் ஐரோப்பாவுக்கு வேண்டுமென்று கர்னல் வெட்ஜ் வுட் முதலியவர்கள் விரும்புவராயின் அ ைத இந்தியாவிலிருந்தே பெற முடியு மென்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆளுல் இந்தியா இப்போதிருக்கும் பராதீன நிலைமையிலே தனது பூர்விக நாகரிகத்தின் உயர்ந்த லகதியங்களைத் தன் வாழ்விலே நிறைவேற்றிக் கொள்வதற்குமே திறமைகளை யிழந்து நிற்கிறது. இந்தியா பராதீன மாக இருக்கும்வரை ஐரோப்பியரிற் பெரும் பகுதி யார் இதைக் குரு நாடாக ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். இந்த நிலையில், அவர்கள் தம்மிட முள்ள குற்றங்களை நீக்கி நம்மிடமுள்ள குணங்களைப் பற்றிக் கொள்ளுதல் எதிர்பார்க்கத் தக்க விஷய மன்று. எனவே, கீழ்த்திசை நாகரிகம் இந்தியாவில் மறுபடி சுடர்விட்டெரிவதை ஐரோப்பியர் கண்டு தமது நாகரிகத்தினும் இது சிறந்ததென்றுணரும் படி செய்யவேண்டும். இதற்கு இந்தியா ஸ்வராஜ்யம் பெற்றாலன்றித் தகுந்த செளகர்யங்களேற்பட மாட்டா. எனவே, வெளியுலகத்து மனுஷ்யாபி மானிகள் இந்தியா ஸ்வராஜ்யம் பெறும்படி உழைப் பது நமக்கு நன்மையாவதுடன், ந ம ைம க் காட்டிலும் அவர்களுக்கே அதிக நன்மையாக முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/402&oldid=605816" இலிருந்து மீள்விக்கப்பட்டது