பக்கம்:பாரதித் தமிழ்.pdf/405

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதிய கவிதைப் படைப்புகள் செய்யுந் திறனின்றி பிருப்பதாக அப்பத்திரிகைகள் சொல்லுகின்றன. இங்கிலாந்திலுள்ள தாமன் ஹார்டி, பெர்னர்ட்ஷா, ஜான் கார்ல்ஸ்வர்த்தி என்போரும் பிரான்ஸிலுள்ள அந்தோல் ப்ரான்ஸ், ரோமாய்ன் ரோலான் முதலிய வர்கள் இவரைக் காட்டிலும் இலக்கிய வெகுமதிக்கு அதிகத் தகுதியுடையோரென்று சொல்லப்படுகிறது. மேலும் ஆங்கில்ப் புலவர்களிலே ருட்யார்ட் கிப்ளிங் ஒருவருக்குத்தான் இதுவரை இப்பரிசு கொடுக்கப் பட்டிருப்பதினின்றும், இங்கிலாந்துக்கு ஸ்வீடன் கலா ஸ்ங்கத்தார் சரியான நியாயம் செலுத்தவில்லை இயன்று தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கார்ல் ஸ்பித்தலர் என்பவரை மிக உயர்வாகிக் கொண்டாடு வோர் ப்ரான்ஸ் தேசத்தில் பலர் இருப்பதாக மற்றாெரு திறத்தார் கூறுகின்றனர். ஜெர்மனியிலும் இவருக்கு மிகுந்த கீர்த்தி யிருந்ததாம். ஆனல் மஹா யுத்தத்தின்போது ஜெர்மானியர் பெல்ஜியம் தேசத்து நடுநிலைமைக்கு பங்கம் விளைத்ததுப்ற்றி இந்தப் புலவர் ஜெர்மனியை உக்ரமாகக் க்ண்டித்துப் பேசியதினின்றும், இவருக்கு ஜெர்மனியிலிருந்த மதிப்புக் குறைவு பட்ட்தர்கத் தெரிகிறது.

4. நட்ஹாம்ஸன்

1920ஆம் வருஷத்து நோபல் இலக்கியப் பரிசு கிடைக்கப்பெற்ற நட்ஹாம்ஸனுக்கு அது தகு மென்று கொள்ளுகிரு.ர்கள். துத்ஹாம்ஸ் அ என்பது இயற் பெயரில்லை யென்றும், இலக்கியத்திற்காக இவர் தாமே ஏற்படுத்திக்கொண்டதோர் புனைபெய ரென்றும் அறிகிருேம். இவர் 1860 ஆம் வருஷத்தில் எளிய தாய் தந்தையர் வயிற்றில் பிறந்தார். அவ ருடை ஆரம்ப வேலைகளாகிய ஒரு காவியமும் ஒரு கதையும் 1878 ஆம் வருஷத்தில் வெளியிடப்பட்டன. ஆனல் அவற்றால் நஷ்டம் வந்ததே யன்றி லாபம்