பக்கம்:பாரதித் தமிழ்.pdf/407

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


408 பாரதி தமிழ்

மேயன்றி, கலகக்காரருக்கு விதிக்கும் தண்டனை அராபியருக்கு விதிக்கக் கூடாதென்ற மேற்கூறிய லண்டன் “டைம்ஸ்’ பத்திரிகையின் அபிப்ராயத் தின் மீது லண்டனில் நடைபெறும் இந்தியா’ பத்திரிகை வியாக்யானம் செய்கிறது. அங்ஙனம் ஸ்மாவா என்ற இடத்தில் போர் செய்யுமிடையே இறந்து போன மிஸ்டர் புகானன் என்ற ஆங்கிலேயர் ஒருவரைக் கொன்றதில் ஸ்ம்பந்தப்பட்ட ஒரு அரபி யின்மீது கொலைக் குற்றம் சாற்றி ஆங்கிலேய அதிகாரிகள் அவனைத் தூக்கிலிட்டுக் கொன்ற தாகத் தெரிகிறது. இப்படி ஒரு யுத்த வீரளுகிய அரபியை ஆங்கிலேயர் கொலையாளியாக பாவித்துக் கொலை செய்ததைக் கருதி அந்த ‘இந்தியா’ பத் திரிகை மிக்க பரிதாபமுணர்த்துகிறது. ஆனால், லண்டன் டைம்ஸ்’ பத்திரிகையின் மேற்கூறிய கொள்கையை நாம் அங்கீகரிப்போமாயின், ப்ரிட் டிஷ் ராஜாங்கத்தில் ஒரு பகுதியில்லாத ம்ெஸ்.பொ டேமியாவில் ஸைந்ய்த்தைக் கொண்டு வைத்துக் கொண்டு அந்நாட்டைச் சூறையாடு முறைமையில் ஒரிரண்டு தனிக்குற்றந்தான காணலாம்? அடிமுதல் நுனிவரை அந்தச் செய்கை முழுமையும் பெருங் குற்றமே யன்றாே?