பக்கம்:பாரதித் தமிழ்.pdf/409

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 பாரதி தமிழ்

தாள். இது நிற்க, மோட்டார் முதலியன விடுவோர் இயன்றவரை ட்ராம் மார்க்கத்தை விட்டு விலகி யோட்டுதல் அவசியமென்று தெரிவித்துக் கொள்ளு கிறேன்.

ட்ராம் வண்டியில் ராஜிய வாதம்

“புதிய யுகம் வரப் போகிறது: மாண்டேகு ஸ்வராஜ்யக் குட்டிப் போடப் போகிருரென்று சத்தம் போட்டதெல்லாம் கடைசியாக, வெங்கட ரெட்டி, ஸாப்பராயலு ரெட்டி, ராம ராயனிங்கார் என்ற மூவரும் நம்முடைய மாகாணத்துக்கு மந்திரி களாக வந்திருக்கிறார்கள். இஃதென்ன விநோதம்!”

என்று, இன்று காலை எனக்கெதிரே ட்ராம் வண்டியிலுட்கார்ந்திருந்த எழுபது வயதுள்ள ஒரு வைஷ்ணவ பிராமணர் கூறினர். அதைக் கேட்டு, அவரருகிலிருந்த மஹம்தியரொருவர்:'எவர் வந்தாலென்ன? சென்னப் பட்டணத்திலே பிராமணர் வந்தாலும் கிலாபத்துக்கு வேலை செய்ய மாட்டார்கள். மற்ற ஜாதியார் வந்தாலும் கிலா பத்தைக் கவனிக்கமாட்டார்கள். இது தரித்திரம் பிடித்த நகரமையா இது லாஹோர், லக்னவ் டில்லி, பம்பாய், கல்கத்தா பக்கங்களிலே கிலா ப்த்துக்கு என்ன வேலை செய்கிறார்கள் தெரியுமா?” என்றார். அப்போது, ஒரு ஐரோப்பிய வியாபார ஸ்தலத்துக் கார்யஸ்தர்போலே தோன்றிய முதலி யார் ஒருவர்-பிராமணர்கள் வந்தால் அதிகமாக ஆங்கிலேய உத்தியோகஸ்தருக்கு அடிமைப்பட மாட்டார்கள். எனவே, ஜனங்களுக்குக் கொஞ்சம் நியாயம் கிடைக்கும். மற்ற்க் கூட்டத்தார் இன்னும் அது சரியாகப் படிக்க்வில்லை’ என்றார். அப்பால் கலாசாலை மானுக்கராகிய ஒரு அய்யர்: