பக்கம்:பாரதித் தமிழ்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸ்த் திரட்டு 413

யப்படுவதை முகாந்தரமாகக் கொண்டு ஹிந்து பத்திரிகையில் நிற வேற்றுமை உணர்ச்சி மனித இயற்கைக்கே சகஜமென்றும் இது சமீபத்தில் இவ் வுலகை விட்டுப் பெயராதென்றும் எழுதப்பட் டிருந்த அபிப்பிராயத்தை ஏற்கெனவே சில தினங் களின் முன்பு மறுத்தெழுதியிருக்கிருேம். அங்ஙனம் மறுத்தெழுதுகையில் ஆசியாக் கண்டத்தாருக்கு இந்த உணர்ச்சி எப்போதுமே கிடையாதென்பதை யும் எடுத்துக் காட்டியிருக்கிருேம்.

அங்ஙனம் நாம் சொல்லியதற்கு வேறொரு நேர்த்தியான உபபலம் அகப்பட்டிருக்கிறது. அதன்ை நம் நேயர்களுக்குத் தெரிவித்தல் பயனுடைய தாகும் என்று நினைக்கிருேம்.

சுக்ர நீதியிலுள்ள பிரமாணம். 1921 ஜனவரி மாஸ்த்து “மாடர்ன் ரிவ்யூ பத்திரிகையிலே சிரித்திர ஆராய்ச்சியில் கீர்த்தி மிகுந்தவராகிய பூரீ விநய குமார சர்க்கார் என்பவர் சுக்ர நீதியின்படி ராஜ்யத் தின் செல்வ ஆதாரங்கள் என்ற மகுடத்தின் கீழ் எழுதிவரும் சிறந்த வியாசத்தின் 5-ம் பகுதி வெளி யிடப்பட்டிருக்கிறது. அதில் பூரீ சர்க்கார் சுக்ர நீதியினின்றும் பலமான மேற்கோள் எடுத்துக் காட்டிப் பூர்விக இந்தியாவில் சேனதிபதி வேலை மந்திரி வேலை முதலாக ஸகல ஸ்தானங்களுக்கும் இந்தியாவிலுள்ள எல்லா ஜாதியாரையும் நியமிக் கலாமென்ற ஏற்பாடிருந்ததுடன் மிலேச்சர் யவனர் முதலிய மத்திய ஆசியாவாசிகளையும் தென் ஐரோப்பாவைச் சேர்ந்த வெள்ளை மனிதர்களையும் இந்தியாவில் எந்த உத்தியோகத்துக்கும் நியமிக் கலாமென்ற ஏற்பாடு இருந்ததென்றும் உள்ளங்கை நெல்லிக்கனி போல மிகத் தெளிவாக விளங்கும்படி ருசுப்படுத்துகிறார். இங்குள்ள ஜாதிபேதங்களைக் கூட நாம் சீர்திருத்த இடமிருப்பினும் வ்ெஸ்ளேயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/412&oldid=605831" இலிருந்து மீள்விக்கப்பட்டது