பக்கம்:பாரதித் தமிழ்.pdf/413

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 பாரதி தமிழ்

கற்பிப்பது போல் இதனை உலகெங்குமில்லாத பெருங் கொடுமையாக்ப் பாவித்தல் சிறிதேனும் நியாயமில்லை. இந்த விஷயமும் பூரீமான் சர்க்காரின் வியாசத்தில் தெளிவுபடுகிறது.

எல்லா மனிதரும் சமமென்ற கொள்கையை ஸ்மூஹ வாழ்க்கையில் ஸ்தாபனம் செய்யும்வரை மானிடருள்ளே இகல், பொருமை, வஞ்சனே, போர் முதலிய ஏற்பாடுகள் நீங்க மாட்டாவாதலால் அக் கொள்கையை எப்படியேனும் அனுஷ்டானத் துக்குக் கொணர்ந்து விடவேண்டுமென்று ஐரோப் பிய ஞானிகள் பேராவல் கொண்டிருக்கின்றனர். இந்தியா ராஜாங்க விடுதலை பெற்றுவிடுமானல் தன் அனுஷ்டானத்தாலே உலகத்தாருக்கு இக்கொள் கையின் நலங்களை விளக்கிக் காட்டி உலகமுழு வதும் இதனைப் பரவச் செய்தல் லாத்யப்படும்.

எt மத்துவக் கொள்கையின் லோககுரு பாரதமாதா

வெறும்மே ஐரோப்பிய வித்வான்கள் செய்வது போல் இவ்விஷயமாக நூல்களும் பத்திரிகை வியா சங்களும் ப்ரசுரிப்பதனுலும் உபந்யாலங்கள் செய் வதாலும் அதிக பயனேற்படாது. தன் உபதேசப் படி தானே நடக்காத ஐரோப்பாவின் உபதேசங் களில் வெளியுலகத்தாருக்கு நம்பிக்கை பிறப்பு தெப்படி? எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தி யாவின் நெஞ்சில் வேதாந்தக் கொள்கை ஊறிக் கிடக் கிறது. இந்த வேதாந்தம் லெளகிகமான அனுஷ்டா னத்தில் பரிபூரணமான ஸம்பூர்ணமான ஸ்மத்துவம் ஏற்படுத்தும் இயல்புடையது. ஆனல் நமக்கும் ஐரோப்பியரின் உறவாலேதான் இக்கொள்கையில் உறுதி ஏற்பட்டது. எனினும் ஐரோப்பியர் அதை