பக்கம்:பாரதித் தமிழ்.pdf/414

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ரஸ்த் திரட்டு 415

நடத்திக் காட்டக் கூடிய அளவு தெளிவு பெற வில்லை. இக்கொள்கை அவர்களுக்குப் புதிது. புதிய கொள்கை உண்மையென்று நிச்சயப்பட்ட மாத் ரத்தில் அதை அனுஷ்டித்துத் தீர்க்க வேண்டுமென் பதில் இந்தியாவுக்குள்ள துணிவு ஐரோப்பாவுக்குக் கிடையாது. ஆனல் நாம் இக்கொள்கையை முற் றிலும் அனுஷ்டித்தல் அன்ய ராஜ்யத்தின் கீழே ஸ்ாத்யப்படவில்லை. ஆதலால் நமக்கு ஸ்வராஜ்யம் இன்றியமையாதது. இந்தியா ஸ் வ ரா ஜ் ய ம் பெறுவதே மனித உலகம் அழியாது காக்கும்வழி.

வெண்மை நிறத்தோரின் ட்சி விஸ் தாரம்

  • o 4. 4.

பூமண்டலத்தின் தரையளவு சுமார் 5,30,00,000 (ஐந்து கோடியே முப்பது லட்சம்) சதுரமைல். இதில் 4,70,00,000 (நான்கு கோடியே எழுபது லட்சம்) சதுர மைல் விஸ்தாரமுள்ள பூமி வெண்மை நிறத் தோரின் ஆதிக்கத்திலிருக்கிறது. இங்ஙனம் உலகம் ஒரு சிறு கூட்டத்தாரின் கீழே அகப்பட்டிருப்பதில் அச்சிறு கூட்டத்தார் தங்களுடைய வயிற்றையும் தமக்கு வேண்டிய இன்பங்களையும் மாத்திரமே கவ னிப்பதுடன் மற்ற உலகத்தாரெல்லாரும் தங்களைக் காட்டிலும் தாழ்வென்றும் நினைத்துக் கொண் டிருக்குமிடத்தே ஸ்மத்வக் கொள்கையின் கதி என்னுகிறது?