பக்கம்:பாரதித் தமிழ்.pdf/416

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சங்கூன் ஸ்ர்வகலா ஸங்க பஹறிஷ்காரம் 417

மனியிலும் ருஷியாவிலுந்தான் காலச் சக்கரம் சுழலுகிறதென்றும் பர்மாவில் சுழலவில்லையென்றும், ஸ்தம்பித்து நிற்கிறதென்றும், மேற்படி ஆகாச குமாரர்கள் எண்ணினர்கள். ஆனால், பர்மாவில் காலச்சக்கரம் இங்கிலாந்தைக் காட்டிலும் அதிக வேகமாகச் சுழன்று வந்திருக்கிறது. இந்த விஷயந் தெரியாமல் வழக்கம்போலே அ தி கா ரி க ள் மஹாத்மா காந்தியின்மீது பழி சுமத்தி அவரைத் துாற்றுகிறார்கள்.

பர்மிய படிப்பாளிகளுக்கும், அதிகாரிகளுக்கு மிடையே நிகழ்ச்சி பெற்றிருக்கும் மனஸ்தாபத்தின் ஆதாரம் பின்வருமாறு:-பம்பாய் மாகாணத்தைப் போல் பர்மா ஒன்றரை மடங்கு பெரிது. ஆயினும், பர்மா முழுமைக்கும் ரங்கூன் நகர மொன்றி லுள்ள இரண்டே முதல்தரக் கலாசாலைகளிருக் கின்றன. பர்மா முழுமைக்கும் உயர்தரப் பாட சாலைகள் 23; ஆரம்பப் பாடசாலைகள் சுமார் 8000 (எண்ணுயிரம்). பம்பாய் மாகாணத்திலோ 200 (இருநூறு) உயர்தரப் பாடசாலைகளுக்கதிகமே யுள் ளன. ஏறக்குறைய 15000 (பதினையாயிரம்) ஆரம்பப் பாடசாலைகளிருக்கின்றன.

இந்த நிலைமையில், பர்மா கவர்ன்மெண்டார் ரங்கூன் யூனிவர்ஸிடியை மாகாணத்துக்குப் பொது வாக்காமல், வஸ்தி ஸஹறிதமாக, (ரங்கூன் நகரத்தில் வந்து வளிப்போருக்கு மாத்திரம் பயன்படும்படி) வைக்க வேண்டுமென்று தீர்மானித்தபோது, ஜனங் களுக்கு வருத்த முண்டாயிற்று. ஏனென்றால், ஸர்வகலா ஸங்கம் மாகாணத்துக்குப் பொதுவாக இருக்குமாயின், அதன் மூலமாக அதிகப் பிள்ளைகள் கடைத்தேற முடியும். இப்போதுள்ள சட்டப்படி, அதன் கட்டிடத்தில் ஏராளமான பணம் செலவு செய்துகொண்டு வாஸம் செய்யக்கூடிய மிகச் சில மாளுக்கருக்கே அது பயன்படும். வஸ்தி ஸஹறித

பா. த.-27