பக்கம்:பாரதித் தமிழ்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 பாரதி தமிழ்

மான ஸர்வ்கலா ஸங்கத்தால் விளையக்கூடிய விசேஷ நன்மைகளை மாளுக்கர் எய்தும்படி செய் வதே நோக்கமெனின்; அப்போது, மாகாண முழு மைக்கும் போதியவாறு ஐம்பது அல்லது நூறு ஸங்கங்கள் ஸ்தாபனம் செய்வதற்குரிய பணச் செலவை ராஜாங்கத்தார் பொறுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

மேலும், அந்த ஸர்வகலா ஸங்கத்துடன் ரங்கூன் நகரத்திலுள்ள பாடசாலைகளை மாத்திரமே சேர்க் கலாமென்று சட்டம் செய்திருக்கிறார்கள். எனவே, மற்ற எவ்விடத்திலும் முதல்தரக் கலாசாலை ஏற் படுத்தக் கூட வழியில்லாமற் போய்விடும். ஸர்வகலா ஸங்க ஸம்பந்தமில்லையெனில் முதல்தரக் கலாசாலை ஸ்தாபித்தல் பயன்படாதன்றாே?

ராஜாங்கத்தார் ஜனங்களுக்குக் கல்வியளிக்க வேண்டுமென்ற வி ரு ப் ப ம் உண்மையாகவே உடையோரென்று காண்பிக்க வேண்டுமாயின், மாகாணமெங்கும் ஆயிரக் கணக்கான பாடசாலைகளே யும் கலாசாலைகளையும் ஸ்தாபித்து, அங்கங்கே முக்ய நகரங்களில் வஸ்தி ஸஹிதமான ஸர்வ்கலாஸங்கங் களே அமைத்தல் இயலும்படி செய்யவேண்டும்.

இதையன்றி, ஒரு வருஷ ஆரம்பப் பயிற்சி அதிக மாக வைத்திருத்தல், லெனேட் ஸ்பையில் பிரதி தித் தன்மையின்மை, என்ற வேறு சில அம்சங் களிலும் பர்மியப் படிப்பாளிகளின் கொள்கை ஸர்க் கார் கொள்கையினின்றும் மாறுபட்டிருக்கிறது.

இந்த அம்சங்களனைத்திலும் பொதுஜனங்களின் நன்மைக்கும் தீர்மானத்துக்கும் தக்கபடி தம்முடைய சட்டத்தை மாற்றிக் கொள்வதே ஜனங்களிடையே கொழுந்து விட்டெறியும் அதிருப்திக் கனலை அவிக்க வழியாகுமன்றி, மஹாத்மா காந்தியை தூஷணை செய்வதில் அதிகப் பயன் விளையாதென்பதை பர்மா கவர்னர் தெரிவாராகுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/417&oldid=605838" இலிருந்து மீள்விக்கப்பட்டது