பக்கம்:பாரதித் தமிழ்.pdf/418

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலக நிலை

சக்திதாஸன்

19 ஜனவரி 1921 ரெளத்திரி தை 7

லார்ட் மில் நரைத் தள்ளியதன் முகாந்தா மென்ன?

குடியேற்ற மந்திரி ஸ்தானத்திலிருந்து லார்டு மில்நர் விலகிக் கொண்டதாகவும், அவர் எகிப்தின் விஷயத்தில் செய்த வேலையினுல் அந்த விலகுதல் ஏற்படவில்லை யென்றும் ராய்ட்டர் இந்தியாவுக்கு மிக லங்கரஹமாக ஸாதித்திருக்கிறார், “என் பிதா மெத்தையில் ஒளிந்திருக்க வில்லை யென்று, கதை யில் ஸாகiய முரைத்த குழந்தையின் நல்லெண் ணத்தை எய்தியே ராய்ட்டர் இங்ஙனம் தந்தி கொடுத்திருக்கிருரென்று வெளிப்படை யாகவே தோன்றுகிறது. எகிப்துக்கு, ஆதியில், (ப்ரான்ஸ், அமெரிகா முதலிய தேச ராஜ்யங்களின் துரண்டு தலாலே) ஏறக்குறைய ஸ்வாதீனமே கொடுப்பதாக விளம்பரம் செய்துவிட்டார்கள். ஸுயேஸ் கால்வா யைத் தமக்கு வைத்துக் கொண்டார்கள். வேறு சில பூமிகளையும் பல உரிமைகளையும் கவர்ந்து கொண்ட னர். இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு பரிபூர்ண ஸ்வா தீனம் கொடுப்பதாகவே வாக்குறுதி செய்து, பூமண் டலமறிய முழங்கி விட்டார்கள். இந்தியாவைப்