பக்கம்:பாரதித் தமிழ்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 பாரதி தமிழ்

இன்பமில்லையா? பராசக்தி, இந்த உலகத்தின் ஆத்மா நீ.

உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட் காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடு கிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா?

முதலாவது, எனக்கு என்மீது வெற்றி தர வேண்டும். குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாய்விட்டது. இரண்டு மாத காலம் இரவும் பகலுமாக நானும் செல்லம்மாளும் புழுத்துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை, இருவருக்கும். உறக்கம் நேரே வர வில்லை-இருவருக்கும். எப்போதும் சஞ்சலம், பயம், பயம், பயம்! சக்தி, உன்னை நம்பித்தானிருந்தோம். நீ கடைசியாகக் காப்பாற்றிய்ை. உன்னை வாழ்த்து கிறேன்.

கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம்-தீராத குழப்பம்! எ த் த னை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!

பராசக்தி, ஒயாமல் கவிதை எழுதிக்கொண் டிருக்கும்படி திருவருள் செய்யமாட்டாயா? கடன் களெல்லாம் தீர்ந்து, தொல்லை யில்லாதபடி என் குடும்பத்தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந் திருக்க, நான் எப்போதும் உன் புகழை ஆயிரவித மான புதிய புதிய பாட்டுக்களில் அமைக்க விரும்பு கிறேன். உலகத்தில் இதுவரை எங்குமில்லாதபடி அற்புதமான ஒளிச் சிறப்பும், பொருட் பெருமையும் உடைய பாட்டொன்று என் வாயிலே தோன்றும் படி செய்யவேண்டும்,