பக்கம்:பாரதித் தமிழ்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக கிலே 421

தலை எப்போது? இத்தனை கேள்விகள் சீறுவாணம் வீசிக் கொண்டிருந்த இடத்தில் எகிப்துக்கு இவர் கள் ஸ்வாதீன விளம்பரம் செய்ததினின்றும் உலகத்து முஸல்மான்களின் புதிய மனக் கொதிப் புக்கள் அடங்கவில்லை. இப்படித்தான் நேருமென் பதை யாரும் முன் யோசனையாலே தெரிந்து கொண் டிருப்பார்கள். ஆனல் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜுக் கும் அவருடைய ப்ரிய ராஜரீகத் துணைவருக்கும் ஊஹ சக்தி குறைவு. நாளைக்குக் காலையில் இன்ன கார்யம் இப்படியாகக் கூடுமென்பதை யுணரும் எதிர்கால ஞானமில்லாதோர் மந்திரி ஸ்தானத்துக் குத் தக்கோரல்லர். எனினும், இவர்கள் அதேைல ஸங்கடங்களுக்குட்படுவது கிடையாது.

மாற்றிச் சொல்லும் வித்தையில் ம்ஹா மஹோபாத்யாயர் ஏனெனில்-ஒரு முறை சொல்லியதை மறுமுறை மனஸ்ஸாசுதியை வீசி யெறிந்துவிட்டு, மாற்றிச் சொல்லும் வித்தையில் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் சம், அவருடைய ஸஹ மந்திரிகளும் மஹா மஹோ பாத்யாயப் பட்டம் பெற்றிருக்கிரு.ர்கள். அமெரி காவிலிருந்து “ஸ்வதந்தர பரியோஷணை ஸங்கத் தின்” (!) அத்யr:கர்களாகிய ஆங்கில மந்திரிகள் எதிர்பார்த்த கைம்மாறுகள் கிட்ைக்கவில்லையென்று புலப்படுகிறது. அதினின்றும், எகிப்துக்குக் கொடுத்த வாக்குறுதியை அசைக்கலா மென்ற உத்தேசம் மேற்படி அத்யகூடிகர்களுக்கேற்பட்டு விட்டதோ என்றெமக்கோர் ஐயமுண்டாகிறது. அங்ஙனம் அந்த வாக்குறுதியைக் கொஞ்சம் புதிய வ்யாக் யானங்களுக் குட்படுத்துவதற்கு முகவுரையாக லார்ட் மில்நரைச் சிறிது காலத்துக்கு விலக்கி வைத்திருக்கிறார்களென்று தோன்றுகிறது. ஆனல் இதிலும் உத்தேசந்தான் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/420&oldid=605844" இலிருந்து மீள்விக்கப்பட்டது