பக்கம்:பாரதித் தமிழ்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 பாரதி தமிழ்

ஸ்பையில் தமக்கு அதிக பலம் ஏற்படுத்திக் கொண் டிருப்பார்கள். இப்போது அவர்கள் குறிப்பிட்ட சிலரையன்றி மற்றப் பிரதி நிதிகளின்மீது எவ்வித சக்தியுமில்லாதிருக்கிறார்கள். அச் சிலரோ சட்ட சபையில் எப்போதும் சிறு பகுதியாகவே யிருப்பார் கள் என்று கர்னல் வெட்ஜ்வுட் சொன்னர்.

தீர்வைப் பாகுபாடு குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் அதிக விஸ் தாரமான பூஸ்திதியுடையவர்களுக்கு அதிகமான தீர்வை விதித்தால், அவர்கள் அந்த ஸ்ங்கடத்தைப் பொறுக்க முடியாமல், தங்களுடைய நிலத்தில் மிஞ் சின பகுதிகளைச் சிறு குடியானவர்களுக்கு விற்கத் தலைப்படுவார்கள். அதினின்றும், பூஸ்திதி முழுமை யும் இப்போது மூன்றே முக்கால் மனிதரின் கையில் சிக்கிக் கொண்டிருக்கையிலே பண்ணைத் தொழி லாளிகள் தம் தொழிற்பயனை யுண்ண மாட்டாத கூலியாட்களாக இருக்கும் நிலைமை மாறிவிடும். பூஸ்திதி ஆதி திராவிடரிடையேயும், மற்றக் குடி யானவரிடையேயும் அதிகமாகப் பரவுத்லெய்தி யிருக்கும். இதைக் கருதிப் பெரிய பூஸ்திதிகளுக்கு அதிகத் தீர்வை விதிக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கர்னல் வெட்ஜ்வுட் அபிப்பிராயப் படுகிரு.ர். இந்தியாவில் பூஸ் திதி விவகாரத்தை முற்றிலும் நியாயமாகத் தீர்த்துக்கொள்ள உத்தே சித்திருக்கிருேம். வரம்புக்கு மிஞ்சின தீர்வையை ஒரு பகுதியாருக்கு மாத்திரம் விதித்தல் அநியாய மென்பதில் ஐயமில்லை. கொள்ளைக்காரனும் கொள்ளே யடிக்கக் கூடாது. உலகத்தில் கொள்ளை கூடா தென்று நிலைநிறுத்த வந்த தர்மிஷ்டர்களும் கொள்ளையடிக்கக் கூடாது. இப்போது கர்னல் வெட்ஜ்வுட் காட்டுகிற பாதை கடைசியாக லெனி னுடைய கொள்கையில் வந்து முடியும். அதாவது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/423&oldid=605848" இலிருந்து மீள்விக்கப்பட்டது