பக்கம்:பாரதித் தமிழ்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புகள் 425

பூஸ்திதிகளை யெல்லாம் ராஜாங்கத்தார் ஜனங்களுக் கென்று சொல்லிப் பலாத்காரமாகப் பறித்துக் கொண்டு உடையவரைத் தெருவில் விடவேண்டு மென்ற கொள்கை.

இங்ஙனம் கொள்ளையிடாமல், ஏழை கள், அதாவது, பூஸ் திதியில்லாதவர்களிடம் ஊர்ப் பொது நன்மைக்கும் அபிவிருத்திக்குமுரிய ஸ்கலவித வேலை களும் வாங்கிக்கொண்டு, அதற்குக் கைம்மாருக, ஒருயிர் மிச்சமில்லாமல், அத்தனை ஏழைகளுக்கும் தகுந்த ஆஹாரம் கொடுத்துவிட வேண்டுமென்று சட்டஞ் செய்துவிட்டால் போதும். ஒருயிரேனும், ஒருபோதேனும், சோறின்றி இளைக்க ராஜாங்கம் இடங் கொடாதென்ற உறுதிப்பாடு ஏற்பட்டுவிடும். அடே அப்பா! பசிப் பயமொன்று மாத்திரம் நீங்கி விட்டால் மனித ஜாதி என்ன மேன்மையடைந்து நிற்கும்! இங்ஙனம், ஸமாதானமான முறையில் இந்தப் பசித் தொல்லையை இந்தியா மாற்றிவிட் டிருப்பதைக் கண் முன்னே காணில், மற்ற உலகத்து நாடுகளும் இ ந் த அறநெறியைப் பின்பற்றி யொழுகும். இதற்கு ஸ்வராஜ்யம் வேண்டும்!

இங்கிலாந்தில் தொழிலற்றாே சின் நிலைமை

தொழிலின்றி யிருப்போருக்குள்ளேதான், இங் கிலாந்து போன்ற தேசங்களில், ருஷியக் கொள் கைகள் வெகு தீவிரமாகப் பரவி வருகின்றன. பொதுவாக அக்கொள்கைகள் தொழிலாளரைக் குறித்தன. ஆதலால் தொழிலாளரிற் பலர் அக் கொள்கைகளை அங்கீகாரம் செய்கிரு.ர்கள். எனினும், அக் கொள்கைகளை அனுஷ்டானத்துக்குக் கொண்டு வருவதில் தொழிலாளர் காட்டும் சிரத்தையைக் காட்டிலும், தொழிலின்றி, உணவின்றி வருந்தும் கூட்டத்தார் பல மடங்கு அதிக சிரத்தை காட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/424&oldid=605849" இலிருந்து மீள்விக்கப்பட்டது