பக்கம்:பாரதித் தமிழ்.pdf/425

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


426 பாரதி தமிழ்

கிறார்கள். எனவே, பொதுவாக ஜனுேபகார சிந்தையால் மாத்திரமேயன்றி, ராஜ்ய தந்திரத்தின் அவஸ்ரங்களாலும் ஐரோப்பிய ராஜ தந்திரிகள் தத்தம் நாடுகளில் தொழிலற்றிருப்போருக்கு ஏதே னும் நிவாரணம் செய்ய வேண்டுமெனற அவசியத் துக்குட்பட்டிருக்கிறார்கள். எனவே, இங்கிலாந்தில், தொழிலில்லாதோரைப்பற்றி ராஜாங்கத்தாரால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணை ஸ்பை யொன் றுளது. அதில் வந்து தம்முடன் கலந்து வேலை செய்யும்படி தொழிற் சங்கங்களின் ஐக்ய மஹா ஸ்மாஜத்தாருக்கு ப்ரி டி ஷ் கவர்ன்மெண்டார் அழைப்புப் பத்திரமனுப்பினர்கள். அந்தத் தொழி லாளிகள் இது தம்மால் இயலாதென்று சொல்லி மறுத்துவிட்டார்கள். ஸர்க்கார்க் கமிட்டி மூலமாக யாதொரு பயன்படக்கூடிய தொழிலும் நடக்கா தென்றுணர்ந்த அத்தொழிற் பிரதிநிதிகள் அவ் விஷயமாகத் தம்மால் இயன்ற ப்ரிஹாரங்கள் செய்யும் பொருட்டுத் தம் மு ைட ய சொந்த ஆலோசனை ஸ்மிதியொன்று நியமனம் செய்திருக் கிறார்கள். -

ப்ரிடிஷ் கவர்ன்மெண்டாரின் சுருக்கு யோசனை

கவர்ன்மெண்ட் கார்யங்களில் நியமிக்கப்பட் டிருக்கும் தொழிலாளிகளின் வேலை நேரத்தைக் குறைத்தால் அவர்களுக்கும் ஆறுதல் ஏற்படும்: தொழிலின்றி யிருப்போர் பலருக்கு ராஜாங்கத்தார் தொழிலேற்படுத்திக் கொடுக்கவும் வழியுண்டாகும். இங்ஙனம் ப்ரிடிஷ் கவர்ன்மெண்டார் சொல்லிய உபாயத்தைத் தொழிற் சங்கப் பிரதிநிதிகளும், ஸ்ர்க்கார் வேலையாட்களும் நிராஹரித்து விட்டனர். ஏனென்றால், குறைந்த நேரம் வேலை செய்து, தொழி லாளிகள் அதற்குத் தக்கபடி குறைந்த சம்பளம்