பக்கம்:பாரதித் தமிழ்.pdf/426

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குறிப்புகள் 427

பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கவர்ன்மெண்ட் சொல்லுகிறது. இப்போதுள்ள சம்பளத்துக்குக் கீழே வாங்கினல் ஜீவிக்க முடியாதென்று தொழி லாளிகள் சொல்லுகிறார்கள்.

இந்தியாவில் தொழிலற்றிருப்போர்

இ ங் கி லி ஷ் படித்தவர்களுக்குள்ளே குறை வாகவும் அதாவது ஆயிரக்கணக்காகவும், இங்கிலிஷ் படிப்பில்லாதவர்களுக்குள்ளே மி கு தி யா க வு ம் அதாவது லக்ஷக்கணக்காகவும் யாதேனும் தொழில் செய்து பிழைக்க வேண்டுமென்ற ஆவலும் தொழில் செய்யுந் திறமையுமுடையோராயினும் தொழிலகப் படாமல் வறுமைப் பிசாசினல் கிழிப்புண்டு மடி கிறார்கள். ஏனென்று கேட்பாரில்லை, ராஜாங் கத்தார் இந்த விஷயத்தை ஸ்மரிக்கவேயில்லே. ராஜாக்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள் இதைக் கருத வில்லை. மடாதிபதிகள், தர்மகர்த்தாக்கள் இதனை ஸ்மரிக்கவில்லை. ஜனத் தலைவர்கள், ர | ஐ ய தந்திரிகள் இதைக் கருதவில்லை. உபந்யாஸ்கர்களும், பத்திராதிபர்களும், உபாத்யாயர்களும் இதைப் புறக்கணித்து விடுகிறார்கள். இந்தியாவிலே பசியால் மடிவோரைப் பார்த்திரங்குவாரில்லையா? தெய்வ மில்லையா?