பக்கம்:பாரதித் தமிழ்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 பாரதி தமிழ்

லிருந்து ஸங்க்ரஹமாக எடுத்தெழுதுகிருேம்:வண்டிகளைக் கமிஷனருடைய அவசியத்துக்காகப் பிடித்து வரும்படி போலீஸாருக்கு உத்தரவு கொடுக் கப்பட்டது. அவர்கள் அந்தக் கட்டளையை நிறை வேற்றுகையிலே பல வித அதிக்கிரமங்களிழைத் தனர். ஒரு காளைக்குக் கழுத்தில் புண்ணு ப் இரத்த மொழுகிக் கொண்டிருந்தது. அந்தக் காளையையும், வண்டி சொந்தக்காரர்களையும் உடன் கொண்டு, நகரத்து ப்ரமுகர் கமிஷன்ரிடம் அதன் லம்பந்த மாக மனுச் செய்துகொள்ள வந்தார்கள். துரைக்கு வண்டி கொடுக்கச் சொன்னல், அதை யெதிர்த்து மனுக் கொடுக்க வந்தார்கள் பார்த்தாயா என்ற கோபம் கமிஷனரின் தலைக்கேறி விட்டது. உடனே அபிமன்யு சண்டை கண்டவனுக்கெல்லாம் அடி, குத்து. மிதி, உதை ஆல்ை இந்த அபிமன்யுவுக் கெதிரே வில்லாளிகளில்லை; வெறுமே விண்ணப்பச் சொல்லாளிகள் இருந்தனர். எனவே, மிஸ்டர் காடெல் உயிர் தப்பியதுமல்லாமல், பின்னிட்டு ஸர்க்கார் விசாரணையிலே விஷயங்களை உண்மை தவறிச் சொல்லிவர இடமேற்பட்டதென்று மேற் படி சாrதிகள் தெரிவிக்கிரு.ர்கள்.

ருமான் போமான்ஜியின் தன்கொடை

பம்பாயில் மாளுக்கர்களுடைய இயக்கத்தில் பூரீமான் போமான்ஜி மிகவும் சிரத்தையெடுத்து வருவதாகத் தெரிகிறது. இந்த இயக்கத்தை நடத்தி வருபவராகிய பூரீமான் தேச பாண்டேயினிடம் பூரீ போமான்ஜி 10,000 ரூபாய் கொடுத்திருக்கிரு.ர். பாடசாலை விட்டு ஒத்துழையாமைக் கிளர்ச்சிக்கு உதவி செய்யும் மாளுக்கர்களின் தற்காலச் செலவு களுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளும்படி இந்தப் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/431&oldid=605861" இலிருந்து மீள்விக்கப்பட்டது