பக்கம்:பாரதித் தமிழ்.pdf/435

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 பாரதி தமிழ்

ஏற்கெனவே ஹிந்துக்களில் பிராமணர் முதலிய எல்லா வகுப்புகளிலும் அங்கங்கே ஜாதிக்கட்டுக்களை உதறிவிட்டு எல்லா ஜாதியாரையும் ஸ்மானமாக நடத்தி வருகிறார்களென்பது மெய்யே. பொதுப் படையாக எல்லா வகுப்புகளிலும் ஜாதிக்கட்டுக்கள் தளர்ச்சி பெற்று ஸ்மத்வக் கொள்கை ஓங்கிக் கொண்டு வருகிறதென்பதும் மெய்யே. ஆசாரத் திருத்த முயற்சி ஆரம்ப முதல் நீதிபதி ராண்டே முதலிய பிராமணர்களாலே அதிக சிரத்தையுடன் போற்றப்பட்டு வருகிற தென்பதை நாம் மறக்கக் கூடாது. ஆனால் இவற்றைக் கொண்டு, இன்றைக்கே பிராமணரல்லாதாரில் மேல் வகுப்பினர் பஞ்சமர் களோடு ஸ்மானமாக உறவாடத் தயாராக இருக் கிறார்களென்று சொல்லுதல் அதிசயோக்தி. எனிலும் ராமராயனிங்கார் தம்மளவிலேனும் தாம் சொல் லியதை மெய்ப்படுத்திக் காட்டுவாரென்று நம்பு கிறேன். இவ்விஷயத்தில் இவர் மனத்தோடு பேசினரா, அல்லது வெறுமே வெளிப் பேச்சுத்தான, என்பதைப் பஞ்சமத் திராவிட நண்பர்கள் பரி சோதனை செய்து பார்க்கும்படி வேண்டுகிறேன்.

ஜெர்மனியிடம் பணம் வாங்குதல்

ஜெர்மனியிடம் வசூலிக்கவேண்டிய தொகை யைக் குறித்து நேசக் ககதியாருக்குள்ளே ஒருமுகமான அபிப்பிராய ஒற்றுமை ஏற்பட்டுவிட்டது. அதாவது ப்ரான்ஸ் தேசத்தார் கேட்டபடி நம்பத் தகாத பொன் குவைகள் ஜெர்மனியிடம் வாங்கும் விஷ யத்தில் இதுவரை மனமிணங்காதிருந்த இங்கிலாந்து முதலிய தேசத்தாரும் இப்போதிணங்கி விட் ட்ார்கள். ஆனல் அதே காலத்தில் நேசகர்கள்’ கேட்கும் அபரிமிதமான தொகைகளை ஜெர்மனியால் செலுத்த முடியாதாகையால், நேசக் ககதியாரின் ஏற்பாடுகளைத் தள்ளி அவற்றுக்கு மாற்றேற்பாடுகள்