பக்கம்:பாரதித் தமிழ்.pdf/436

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில குறிப்புகள் 437

சில தயார் செய்து கொடுப்பதாக ஜெர்மன் மந்திரிகள் தீர்மானஞ் செய்திருக்கிறார்கள். எனவே நேசக் ககதியாருள் ஏற்பட்ட இணக்கத்தினின்றும் நாணய மாற்றுச் சந்தைகளிலும் பங்குப் பத்திரச் சந்தைகளிலும் எதிர்பார்க்கப்பட்ட மாறுதல்கள் தோன்றவில்லை. ஏனென்றால், நேசக் கrயாரின் வேண்டுதலுக்கிணங்கும்படி ஜெர்மனியை இவர்கள் வற்புறுத்த முடியுமா என்பதைப் பற்றி வியாபாரி களுக்குள்ளே ஸம்ஸ்யம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், ஜெர்மனி தான் செலுத்த வேண்டிய ஈட்டுப் பணங் களை மார்க் என்ற ஜெர்மன் நாணயங்களில் செலுத்தும்படி உடன்பாடு விதிக்கிறது. எனவே, இப்போது ஜெர்மன் ராஜாங்கத்தார் கோடிக் கணக் கான காயிதப் பணத்தை அடித்து, “மார்க்’ நான யத்தின் மதிப்புக் குறைந்து போகும்படி செய்வார் களோ என்றும் வியாபாரிகள் பயப்படுகிறார்கள். இதுபற்றியே நேசக் ககதியாரின் நாணயங்களுக்கு எதிர்பார்க்கப்பட்டபடி மதிப்பேறவில்லை யென்று லண்டன் நகரத்துப் பொருள் நிபுணர்கள் சொல்வ தாக ராய்ட்டர் தெரிவிக்கிறார். இப்போது (ஜன-31) ஒரு பவுனுக்கு 24 மார்க் விலை. ஜெர்மன் ஜனங் களின் மனதில் நேசக் ககதியார்களின் முடிவுபற்றி மிக்க அதிருப்தியும் கொதிப்பும் ஏறியிருப்பதாகத் தெரிகிறது.