பக்கம்:பாரதித் தமிழ்.pdf/439

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


U பாரதி தமிழ்

மானியப் பத்திரிகை நாமங்கள் ஆண்பாலோ பெண் பாலோ, ஒன்றன்பாலோ, பலர்பாலோ, பலவின் பாலோ அறிகிலோம். இவை போன்ற சிரமங்களைக் கருதி ஸாதாரணமாக, வழக்கம் போலவே, எல்லாப் பத்திரிகைகளின் ப்ெயுர்களையும் ஒன்றன் பாலாகவே வழங்கி விடுதல் நன்றென்று நினைக்கிறேன்.

‘யானைக்கால்’ வியாதிக்கு முகாந்தாம் !

தென் இந்தியாவில் ஒரு நகரத்தில் ஒரு செல்வ் மிகுந்த வியாபாரிக்கு இரண்டு கால்களிலும் யானைக் கால் நோய் வந்து கால்கள் உரல்களைப் போலாய் விட்டன. ஆனல் அந்தச் செட்டியார் தமக்கு யானைக்கால் நோயென்று சொல்ல மனமில்லாமல், யாராவது, “காலிலே என்ன?’ என்று கேட்டால் தம்மிடம் மோட்டார் சைக்கிள் வண்டி யிருப்ப தாகவும், அதில் ஏறிச் செல்லும்போது, அது தம்மை எங்கேயோ மரத்தில் மோதிக் கீழே தள்ளிவிட்ட படியால் கால்கள் வீங்கி யிருக்கின்றன என்றும் சொல்வதுண்டு. அதுபோல் ஆங்கிலேய ராஜ தந்திரி களில் சிலர் தமது தேசத்திலேற்பட்டிருக்கும் வறு மைக்கும் பணத்தட்டுக்கும் காரணம் சொல்லும் போது தங்கள் தேசத்தில் செழித்துக் கிடக்கும் செய் பொருள்களை மற்ற ஐரோப்பிய தேசத்தார்கள் விலைக்கு வாங்க முடியாதபடி பரம ஏழைகளாப் விட்டபடியால் தங்களுடைய வியாபாரம் வீழ்ச்சி பெற்றிருப்பதாகவும் அதனல் பணக் கஷ்டம், தொழிலின்மை மிகுதி முதலியன தோன்றிவிட்ட தாகவும் ‘ஷரா’ சொல்லுகிரு.ர்கள். ஆனல் மேற் கூறிய இதர ஐரோப்பிய தேசங்களின் ராஜ தந்திரிகள் தத்தம் நாடுகள் ஏழ்மைப்பட்டதற்கு என்ன முகாந்தரம் சொல்லித் தப்புகிறார்களோ தெரியவில்லை. அவர்கள் இங்கிலாந்தின்மீது குறை