பக்கம்:பாரதித் தமிழ்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 பாரதி தமிழ்

தீர்ந்து, நோயின்றி, நன்றாக ஒடி உடலை நன்கு காத்துக் கொண்டிருக்க வேணும்-பராசக்தியின் அருளால்.

செட்டி பணத்துக்கு எத்தனை நாள் பொய் சொல்லுகிறது? பொய் வாயிதா, பொய் வாயிதா பொய் வாயிதா-தினம் இந்தக் கொடுமைதாளு? இச்!ே

பராசக்தி-உன்னை நான் நம்புவதை முற்றிலும் விட்டு, நிச்சயமாக நாஸ்திக்ளுய் விடுவேன். என்னை அற்பத் தொல்லைகளுக்கு உட்படுத்திக் கொண்டே யிருந்தால்,

மஹாசக்தி-நீ யிருப்பதை எவன் கண்டான்? உனக்கு அறிவுண்டென்பதை எவன் கண்டான்? இந்த உலகம்-சரி, சரி, இப்போது உன்னை, வைய மாட்டேன். என்னைக் காப்பாற்று. உன்னைப் போற்றுகிறேன்.

பிறருக்கு நான் தீங்கு நினையாதபடி நீ அருள் புரிந்தால் நல்லது. துஷ்டர்களைக்கூட நீ தண்டனை செய்துகொள். எனக்கு அதிலே ஸந்தோஷமில்லை. எனக்குப் பிறர் செய்யும் தீங்குகளை நீ தவிர்க்க வேண்டும். நான் உன்னையே சரணடைந்திருக் கிறேன்.

சொல்லு மனமே, சொல்லு, பராசக்தி வெல்க! பராசக்தி வெல்க.’ இந்தக் குறிப்பு 1915 ஜூலை 2-ஆம் தேதி எழுதப்பட்டுள்ளது. அது சமயம் பாரதியாரின் இரண்டாவது குழந்தை சகுந்தலை மட்டும் அவ ருடன் இருந்தது. முதற் குழந்தை தங்கம்மா காசி யில் வாழ்ந்தது. சகுந்தலைக்குக் காய்ச்சலால் மிகவும் கவலைக்கிடமான நிலைமை ஏற்பட்டிருக்கிறதென்று