பக்கம்:பாரதித் தமிழ்.pdf/440

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஹாஸ்யம் 441

சொல்லுகிறார்களோ அல்லது, ஆசியாவைக் காண் பிக்கிறார்களோ அறியோம்.

புதிதாகச் சென்னை நிர்வாஹ ஸபையில் சேர்ந்த பிராமணரும், (பஞ்சமரும், ஐரோப்பியருமாகிய பிறரும்) அல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள் தமிழர்களும் அல்லாதார் என்பதைத் தமிழராகிய பிராமணரும் (பஞ்சமரும் பிறரு)மல்லாதார் ஒருவர் என்னிடம் வந்து முறையிட்டார். ஹாம்! இந்த பாஷை சரிப்படாது. நடந்த விஷயத்தை நல்ல தமி ழில் சொல்லுகிறேன். தமிழ் வேளாளரொருவர் இப் போது மந்திரிகளாகச் சேர்ந்திருக்கும் ரெட்டியாரும், நாயுடுவும், பூரீராமராயனிங்காரும் தெலுங்கர்க ளென்றும், தமிழ் நாட்டுக்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாம்ை வருந்தத்தக்க செய்தியென்றும் என்னிடம் வந்து முறையிட்டார்.

“ஜஸ்டிஸ் பாடம்’

எனக்கு “ஜஸ்டிஸ்’ பத்திரிகையில் வாசித்த வியாஸ்மொன்று மேற்படி கதை கூறி வருகையி லேயே ஞாபகத்துக்கு வருகிறது. அதில் அந்த “ஜஸ்டிஸ்’ பத்திராதிபர் ஹிந்து’ பத்திராதிபருக் குப் பல பல ஞளுேபதேசங்கள் செய்திருக்கிரு.ர். அவற்றின் மொத்தக் குறிப்பு யாதென்றால் ஆங் கிலேய அதிகாரிகளின் ஆட்சியை இந்த rணமே பஹறிஷ்காரம் செய்துவிட வேண்டுமென்ற ‘காங் கிரஸ்’ கrதியைச் சேர்ந்த பத்திராதிபர் யார் மந்திரி யாக வந்தாலும் கவனிக்கக் கூடாதென்பது. அவர் களிடமுள்ள குணதோஷங்களை எடுத்துக் கூறவும், அந்த ஸ்தானத்துக்குப் பிறரை சிபார்சு செய்யவும் ‘ஹிந்து'வுக்குத் தகுதி கிடையாதென்பது.

ஏன் தகுதி கிடையாது? அதைக் குறித்துத் தர்க்கமெப்படி? “ஹிந்து” ஜனங்களுக்குப் பிரதி