பக்கம்:பாரதித் தமிழ்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாஸ்யம் 443

பத்திரிகை நம்மை ஐரோப்பிய வியாபாரிகளுடைய விளம்பரம் ப்ோடும் குற்றத்துக்காகத் தண்டனைக் குட்படுத்த அதிகாரமுடையது. ஐரோப்பிய ஸம்பந் தமே அங்கில்லையே! இது குற்றமென்று ஜஸ்டிஸ்” சொல்வது பேதமை. விளம்பரங்களில்லாமல் இக் காலத்தில் பத்திரிகை நடத்த முடியாது. இது இந்தி யருக்குத் தெரியும். ஆதலால் பத்திரிகைக்குள்ளே பத்திராதிபர் எழுதியிருக்கும் கருத்தைக் கவனித்து நடப்பார்களேயன்றி விளம்பரத்தைக் கவனித்து தேசக் கடமையை நிர்ணயிக்க மாட்டார்கள். ‘ஹிந்து’ பத்திரிகையில் சுருட்டு விளம்பரம் போட்டிருக்கிறது. அதனின்றும் ஹிந்து” பத் திராதிபர் உலகத்தாரையெல்லாம் புகையிலைச் சுருட்டுக் குடிக்கும்படி வற்புறுத்துகிருரென்று நிச்ச யித்தல் பொருந்துமா? “ஜஸ்டிஸ்’ பத்திரிகையில் “காந்தி சரித்திரம்’ என்ற புஸ்தகத்தின் விளம்பரம் ப்ரசுரிக்கப்பட்டால் அதனின்றும் “ஜஸ்டிஸ்’ பத்திராதிபர் மஹாத்மாவின் கொள்கைகளைப் பரப்ப விரும்புகிருரென்று நிச்சயித்து விடலாமா? ‘ஹிந்து விளம்பரங்களைப் பிரசுரம் செய்வதை நிறுத்திவிட்டால், ஜஸ்டிளின் வருமானம் அதிகப் படுமென்பது அப் பத்திரிகையின் ஆட்சேபத்திற்குக் காரணமோ?

அப்படி நிச்சயிக்கும்படி இந்தியர்கள் அத்தனை மூடர்களல்லர். மேலும், மனம் வேறு, சொல் வேறு, செயல் வேருக நிற்பது தவறென்று ஜஸ்டிஸ்’ பத்திராதிபர் பிறருக்கு போதிப்பதைப் பார்த்து எனக்கு மேன்மேலும் நகைப்பு விளைகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/442&oldid=605878" இலிருந்து மீள்விக்கப்பட்டது