பக்கம்:பாரதித் தமிழ்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேசக் ககூஜியாரின் “மூட பக்தி’

சக்திதாஸன்

1 1 பிப்ரவரி 1921 ரெளத்திரி தை 30

“ரெயிக் ஸ்தாக்’ என்ற ஜெர்மன் ஜனப் பிரதி நிதிகளின் ஸ்பையில் ஹெர் வோன் விமோன்ஸ் என்ற ஜெர்மானிய மந்திரி சில தினங்களின் முன்பு நேசக் ககதியாரின் பரீஸ் ஸமாஜத்தில் முடிவு செய்யப்பட்ட நஷ்டஈட்டுத் தொக்ைகளைப் பற்றிப் பேசுகையில், ஜெர்மனியுடன் ஸ்மரஸமான-வாதங் கள் செய்து பெறக்கூடியதைக் காட்டினும் ஜெர் மனிக்குக் கட்டளை” பிறப்பிப்பதஞல் அதிகம் பெறக்கூடுமென்ற மூட பக்தியை நேசக் கrயார் நீக்கிவிடுதல் தகுமென்று எச்சரிக்கை செய்தார். ஏற்கெனவே ப்ருஸ்ஸெல்ஸ் நகரத்தில் நடைபெற்ற அர்த்த சாஸ்த்ர நிபுணர்களின் ஸங்கத்தில் ப்ரெஞ்ச் பிரதிநிதியாகிய பூரீமான் லேது என்பவ் ரால் திட்டஞ்செய்யப்பட்டு,மற்ற ஆங்கில, ப்ரெஞ்ச் அதிகாரிகளாலும் அங்கீகரிக்க்ப் பெற்றிருக்கும் ஏற்பாட்டை நேசக் ககதியார் இங்ஙனம் திடீரென்று கைவிட்டு விட்டதைக் குறித்து ஹெர் வோன் விமோன்ஸ் வியப்புத் தெரிவித்தனர். லண்டனில் நடத்தப்போகிற ஸ்பைக்கு ஜெர்மன் பிரதிநிதி களையும் அழைக்கப் போவதாக மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் தெரிவித்திருந்தார், அதாவது; பரீஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/443&oldid=605879" இலிருந்து மீள்விக்கப்பட்டது