பக்கம்:பாரதித் தமிழ்.pdf/446

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேசக் கக்ஷயாரின் மூட பக்தி 447

ணம் எவருக்கு முண்டாகக்கூடும். ஆனால், இங்ஙனம், மஹாயுத்தத்தால் நேசக் ககதியார்களுக்கு விளைந் திருக்கும் நஷ்டங்களை சிரமமில்லாமல் ஜெர்மனியின் தலையில் கட்டித் தாம் தப்பிவிடலாமென்று கருதும் மூட பக்தியைக் காட்டிலும் மற்றாெரு பெரிய மூட பக்தி யிருக்கிறது. அதைக் குறித்துச் சில வார்த்தை கள் சொல்லுதல் நமது கடமை என்று நினைக் கிருேம். அந்த மூட பக்தி நேசக் ககதியாருக் குள்ளே பொதுவாக இருப்பினும், அவர்களுக்குள் மந்திராலோசனை முதலிய விஷயங்களில் தலைமை பூண்டிருக்கும் இங்கிலாந்தினிடம் மிகவும் விசேஷ மாகக் காணப்படுகிறது. இதனை ஒரு திருஷ்டாந்த மூலமாக விளக்குகிருேம்.

ரெயிக் ஸ்தாக்கில் மேற்கூறிய பூரீஸிமோன்ஸின் உபந்யாஸம் இந்த மாஸம் (பெப்ருவரி) முதல் தேதி யன்று நடைபெற்றது. அதே முதல் தேதியன்று ஜர்லாந்தில் கார்க் நகரத்தில் ராணுவ விசாரணைக் கொலைத் தண்டனை ெயா ன் று நிறைவேற்றப் பட்டது. ராணுவ விசாரணையின் கீழ் இதுதான் முதலாவது கொலைத் தண்டனை யென்று ராய்ட்டர் தெரிவிக்கிரு.ர். கொரி ெய ன் ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவனிடம் அனுமதிச் சீட்டில் லாத கைத் துப்பாக்கி யொன்றிருந்ததாகக் குற்றஞ் சாற்றி. அக் குற்றத்துக்காக அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அடக்கு முறை களால் ஐர்லாந்துக் கலகத்தை நசுக்கிவிடத் தீர் மாணஞ் செய்திருக்கிறார்களென்று இதல்ை நன்கு விளங்குகிறது. இதைத்தான் நாம் பரம மூடபக்தி யென்று சொல்லுகிருேம். ஜனங்கள் ஏற்கெனவே கொடுமையை எதிர்த்துக் கலகம் புரியும்போது, அந்தக் கலகத்தை அடக்க இன்னும் அ தி க க் கொடுமையை வழங்குதல் உபயோகமற்ற-தீமையை