பக்கம்:பாரதித் தமிழ்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 பாரதி தமிழ்

மிகுதிப் படுத்தக் கூடிய-முறை யென்பதை உலக சரித்திரம் மீட்டும் மீட்டும், மீட்டும் எத்தனையோ திருஷ்டாந்தங்களால் விளக்கியிருக்கிறது. எனிலும் அதே முறையைத்தான் ஸிரியாவில் ப்ரான்ஸ் தேசத்தார் கையாள முயலுகிரு.ர்கள். மெஸ்பொ டோமியாவிலும் அரபியாவிலும் ஆங் கி லே ய ர் அதைத்தான் கையாண்டு வருகிறார்கள். கிரேக்கர் துருக்கியில் அதே கிரீடை செய்து வருகிறார்கள். அச்சம், சினம் முதலிய சித்த வி ரு த் தி க'ள் தோன்றும்போது ஸ்ாதாரண மனிதர் புத்தி தவறி வேலை செய்தல் ஸஹஜம். அந்த ஸமயத்தில் ஜனங் களுக்கு யுக்தி, அனுபவம், சாஸ்திரம் என்ற மூன்று வித ப்ரமாணங்களும் பறந்துபோய் விடுகின்றன. எனவே புத்தி ஹீனமான கார்யங்கள் செய்து பெரிய நஷ்டங்களுக்குள்ளாகின்றனர்.

ஆனால், இவ்விதமான கார்யங்களை ராஜாங் கத்து மந்திரிகள் செய்வாராளுல், அவர்கள் ராஜ்ய பாரத்துக்குத் தகுதியற்றாேராய் விடுகிறார்கள். மேலும், மனுஷ்ய ஸ்ஹோதரத்வம், ஸ்மத்வம் இவை ஐர்லாந்துக்குண்ட்ா, இல்லையா? அரபியா வுக்கும், மெஸ்பொடோமியாவுக்கும், இந்தியா வுக்கும், எகிப்துக்கும் அவை உண்டா, இல்லையா? இல்லையெனில், ஏன் இல்லை?:தெய்வ விதிகளுக்கு மாற் றில்லை. கொடுமையும் அநீதியும் செய்வோர் கொடு மைக்கும் அநீதிக்கும் இரையாவர். பிறரை அடி மைப் படுத்துவோர், தாம் அடிமைகளாக்கப்படுவர். அநியாயம், ஸ்மத்வ விரோதம் முதலியவற்றால் ஐரோப்பிய மஹாயுத்தத்தில் அபாரமான கஷ்டங் களுக்குட்பட்டும், ஐரோப்பிய ராஜதந்திரிகளுக்கு இன்னும் புத்தி த்ெளியாமலிருப்பதுபற்றி விசனப் படுகிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/447&oldid=605885" இலிருந்து மீள்விக்கப்பட்டது