பக்கம்:பாரதித் தமிழ்.pdf/448

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பூகோள மஹா யுத்தம்”

சக்திதாலன்

12 பிப்ரவரி 1921 ரெளத்திரி மாசி 1

ஐரோப்பாலைப் பிடித்த சனியன் இன்னும் முற் றிலும் நீங்கியதாகத் தெரியவில்லை. சென்ற நான்கு நூற்றாண்டுகளில் ஐரோப்பா கல்வித் தேர்ச்சி, இயற்கை யறிவு முதலியவ்ற்றில் எவ்வளவோ மேன்ம்ையடைந்திருக்கிறது. ஆனால் அதை அக் கல்வி முதலியவற்றால் எய்தக் கூடிய முழு நலத்தை யும் எய்தாதபடி தடுத்து, ஏறக்குறைய ஸ்மசான நிலைமையில் கொண்டு சேர்த்தது யாதெனில், அதன் ஓயாத போர் நினைவு! ஐரோப்பாவில் ஸ்தா ஏதேனு மோர் யுத்தம் நடந்து கொண்டிருக்கும். அல்லது விரைவில் ஒரு யுத்தம் வரப் போவதாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

அந்தக் கண்டத்தாரின் மனதிலிருந்து யுத்த பயம் முற்றிலும் நீங்கியிருந்த ஒற்றை rணமேனும் பல நூற்றாண்டுகளாகக் கிடையாது.

இதனிடையே, சென்ற நான்கு நூற்றாண்டு களுக்கு முன்பு ஐரோப்பாவின் ஒருபாகத்தினுள்ளே ஒதுங்கி வாழ்ந்த வெள்ளை ஜாதியர்கள் இன்றைக்கு ஐரோப்பா முழுதையும், அமெரிக்காக் கண்ட ழுழுதையும், ஆஸ்திரேலியாவையும், ஆப்ரிக்காவில்

பா. த.-29 .