பக்கம்:பாரதித் தமிழ்.pdf/449

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 பாரதி தமிழ்

முக்காலே யரைக்காற் பங்கையும், ஆசியாவில் பாதிக்கு மேற் பகுதியையும் தமக்குக் கீழ்ப்படுத்திக் கொண்டு விட்டார்கள்.

இங்ஙனம் இந்த நான்கு நூற்றாண்டுகளுக் குள்ளே பல கண்டங்களை வெல்லும் சக்தி இவர் களுக் கேற்பட்டதன் காரணம் வெடி மருந்து துப்பாக்கி, பீரங்கிகள். இந்த ஆயுதங்கள் மற்றக் கண்டத்தாரின் வசப்படு முன்பு வெள்ளை ஜாதிய ருக்கு வசப்பட்டன. அதனல் பூமண்டலம் அவர் களுடைய ஆதிக்கத்தின் கீழே வீழ்ந்தது.

ஆனால், இங்ஙனம் உலக முழுதையும் வென்று அங்கெல்லாம் தங்களுடைய வியாபாரத்தையும் நிலை நிறுத்தி ஏராளமான் செல்வங்கள் திரட்டி ஐரோப் பாவுக்குக் கொணர்ந்த ஐரோப்பியர் அந்தக் குவை குவையான திரவியங்களையும் அவர் க ளு க் கு * லயன்ஸ்’’ ஞானத்தால் இயற்கையின் மீது கிடைத்த புதிய சக்திகளையும் யுத்தத்தில் உபயோகப் படுத்துவதே முதற் கடமையாகக் கருதினர்.

திருஷ்டாந்தமாக, வான விமானம் பறக்கத் தொடங்குவதற்கு முன்னதாகவே ஐரோப்பியர் அதைப் போரில் உபயோகப்படுத்துவ தெப்படி என் பதைக் குறித்து யோசனை செய்யத் தொடங்கி

L– L–fTITGGIT

இந்த குணத்திலிருந்து கடைசிப் பயனுக விளைந்த ஐரோப்பிய மஹா யுத்தத்தினல் தாம் எய்திய கஷ்டங்களை உணர்ந்த பின்னராவது அவர் களுக்கு இந்த குணம் அடியோடு தொலைந்துவிட்ட தென்று நினைத்தோம். ஆனல் பிறவிக் குணத்துக்கு மட்டை வைத்துக் கட்டினல் போதுமா? இத்தனை கஷ்டங்களுக்குப் பிறகும் இந்த குணம் அவர்களைக் கொஞ்சம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது.