பக்கம்:பாரதித் தமிழ்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் வாழ்க்கை வரலாறு 45


 இதே மாதத்தில் பரலி சு நெல்லையப்பருக்கு எழுதியுள்ள கடிதத்திலும் இது விஷயம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட துன்பக் கனவில்தான் அவருடைய கவிதையும் எழுத்தும் புடமேறி மெருகு பெற்றுயர்ந்தன. அவருடைய மிகச் சிறந்த பாடல் களும் கதை கட்டுரைகளும் புதுச்சேரி வாழ்க்கைத் துய்ரினிடையே உருப்பெற்றன. பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ஆகியவை இங்கே ஜீவசக்தி நிறைந்த புதிய உரை நடையில் பல கதைகள், கட்டுரைகள் இங்கு எழுதப்படடத் உதய மாயின. பாரதியாருடைய கவிதையும் உரைநடை யும் புதுச்சேரியில் மெருகேறிப் பூரண முதிர்ச்சியடைந்தன என்று பொதுவாகக் கூறலாம்.

பாரதியார் துன்ப வாழ்க்கை நடத்தினர் என்று சொல்லுவதால் அவருக்கு யாருமே உதவி செய்யவில்லை என்று தீர்மானித்துவிட்க் கூடாது. புதுச்சேரியிலேயே பொன்னு முருகேசம் பிள்ளை, அவர் மனைவி - அண்ணியம்மாள் என்றழைக்கப்பெறும் செளந்திரம்மாள், விளக்கெண்ணெய்ச் செட்டியார், குவளைக் கண்ணன், சுந்தரேசையர், கிருஷ்ணசாமி செட்டியார் (வெல்லச்சு செட்டியார்) போன்றவர்கள் அவரவர்களுக்கு இயன்ற வழியிலே பாரதியாருக்கு உபகாரமாக இருந்தார்கள். பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்தும், சில சமயங்களில் தென்னுப்பிரிக்காவிலிருந்தும் பொருளுதவிகிடைத்து வந்தது. அந்த உதவி கைக்கு வந்து சேருவதில் எத்தனையோ சிரமம் உண்டு.

ஏ.ரங்கசாமி ஐயங்கார் அவர்கள் சுதேசமித் திரன் பத்திரிகையை ஏற்று நடத்த தொடங்கியபின் மறுபடியும் அப்பத்திரிகைக்கு எழுதும் சந்தர்ப்பம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/45&oldid=1539805" இலிருந்து மீள்விக்கப்பட்டது