பக்கம்:பாரதித் தமிழ்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூகோள மஹா யுத்தம் 453

கொண்டு வருகிறது. தன் பீரங்கிகளைப் பெருக்கு கிறது. தன் படைகளைப் பலப்படுத்துகிறது.

இதைக் கண்டு அமெரிகாவுக்கு நடுக்க மேற்பட் டிருக்கிறது. அமெரிகாவுக்கு இங்கிலாந்து கழுத்து வரை கடன் பட்டிருக்கிறது. இங்கிலாந்துக்கும் ஜப்பானுக்கும் நட்புடம்பாடு செய்து கொள்ளப்பட் டிருக்கிறது. ஆனால், ஜப்பானுடன் சேர்ந்துகொண்டு இங்கிலாந்து அமெரிகாவுடன் போர் செய்யா தென்று மிஸ்டர் மக்ளுர் ப்ரமாணம் பண்ணுகிரு.ர். அதை லண்டன் டைம்ஸ்’ பத்திராதிபர் மனப் பூர்வமாக ஆமோதிக்கிரு.ர்.

மேலும் தென் ஆசியாவிலும் ஆப்பிரிகாவிலு முள்ள ஜனங்கள் ஐரோப்பாவின் ஆட்சியைத் தள்ளி விடப் போகிறார்களாம். அவர்களிடம் ஆயுதங்கள் இல்லையேயெனில், அவர்கள் அவற்றை மிக விரைவில் செய்து கொள்வார்களென்று மிஸ்டர் மக்ளூர் சொல்லுகிரு.ர்.

இந்த யுத்தத்தில் சில ஐரோப்பிய தேசத்தார் ஆசியாக் கண்டத்தாரின் பக்கத்திலே சேர்ந்து கொள்ளக் கூடுமென்று மிஸ்டர் மக்ளூர் சொல்லு கிரு.ர்.

எனவே, வெள்ளை ஜாதியாருக்குப் பெரிய ஆபத்து வரப் போகிறதென்று மிஸ்டர் மக்ளூர் பலமாக எச்சரிக்கிரு.ர். ஆனல் ஆசியா இந்தியாவின் தலைமைக்குட்பட்டது. இந்தியா ஐரோப்பியரைக் கூடக் கொல்ல விரும்புவதில்லை. திருத்த விரும்பு கிறது. எனவே, ஐரோப்பியர் இந்தப் புதிய பயத்திற் கிரையாதல் அவசியமில்லை. அது வெறும் பேதை யச்சம். ஆனல் நம்முடைய சொல் ஐரோப்பாவில் எட்டுவதைக் காட்டிலும் லண்டன் “டைம்ஸ்’ பத்திரிகையின் சொல் அதிகமாகவும் விரைவாகவும் எட்டுமே? அதற்கென்ன செய்யலாம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/452&oldid=605893" இலிருந்து மீள்விக்கப்பட்டது