பக்கம்:பாரதித் தமிழ்.pdf/453

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மணித் திரள்

காளிதாஸன் 14 பிப்ரவரி 1921 ரெளத்திரி மாசி 3

வாளும் எழுதுகோலும்

என்றைக்குமே ராஜ்ய தந்த்ரத்தில் வாளைக் காட்டிலும் எழுதுகோலுக்கே மகிமை அதிகம். அதிலும் ஐரோப்பிய மஹா யுத்தத்தின் பிறகு இக் கொள்கை முன் எப்போதையுங் காட்டிலும் அதிக ஆழமாகவும் உறுதியாகவும் பூமண்டலத்து ராஜ்ய தந்திரிகளின் மனதில் பதிந்து விட்டது. ப்ரான்ஸ் தேசம் ஒன்றில் மாத்திரமே:இந்த மஹா யுத்தத்தில் பத்து லகம் ஜனங்கள் மடிந்திருப்பதையும் இன்னும் பல லகrங்கள் அங்கஹlனராய் விட்டதையும் எடுத் துக்காட்டி, அப்பால் இங்கிலாந்திற்கும் இ ைதவிடக் குறையாத நஷ்டமேற்பட்டிருக்கு மென்பதைச் சுட்டிச் சில தினங்களின் முன்பு பூரீமான் க்ளெ மான்ஸோ என்ற ப்ரெஞ்ச் ராஜதந்திரி (இப்போது இந்தியாவில் யாத்திரை செய்துகொண்டு வருபவர்) இனிமேலேனும் உலகத்தார் யுத்தப் பைத்தியத்தை விட்டுத் தொலைத்தல் அவஸ்ரமென்பதை வற்புறுத் தியது நேயர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

அமீர் அமானுல்லாகான்

1921 ஜனவரி 10-ஆந் தேதி திங்கட்கிழமை

யன்று காபூல் நகரத்தில் ப்ரிடிஷ் தூதர்களே வர