பக்கம்:பாரதித் தமிழ்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணித் திரள் 455

வேற்கும் பொருட்டாக ஒரு பெரிய தர்பார் நடத்தப் பட்டது. அப்போது ஆப்கன் அரசராகிய அமீர் அமானுல்லாகான் செய்த உபந்யாஸத்தினிடையே, காபூலில் நடத்தும் ஆங்கில-ஆப்கன் ஆலோசனை ஸ்பையில் தம்முடைய முக்ய ப்ரதிநிதியாக ஸர்தார்இ-ஆலா முஹம்மது கான் தர்ஜியை நியமனம் செய்ததற்குப் பின் வருமாறு காரணம் சொன்னர்:"ஸர்தார் முஹம்மத் நாதிர்கான் போர்த் தொழி லாளியாதலால் நான் அவரை நியமனம் செய்ய வில்லை. ஸர்தார்-இ-ஆலா முஹம்மது கான் தர்ஜி எழுதுகோற் பயிற்சியுடையவராதலால் அவரையே நியமனம் செய்திருக்கிறேன். ஏனென்றால் இந்தக் காலத்தில் வாளைக் காட்டிலும் எழுதுகோலே அதிக அவசியமானது’ என்றார். இந்த உண்மையான கொள்கையை ஆப்கன் அமீர் எப்போதும் மறக்காம விருப்பாரென்று நம்புகிருேம். தேசத்தின் அபி விருத்திக்குப் பரோபகார சிந்தையுள்ள மேதாவி களின் இடையருத உழைப்பே ஸாதனம். வாள் சிறிது காலத்துக்குக் காப்பாற்றுவதுபோலே நடிக் கும். பிறகு ஸர்வ நாசத்தில் கொண்டே சேர்க்கும். எனவே இந்தியாவுக்கு வாள் பலம்’ அல்லது தற்கால பாஷைப்படி பீரங்கி பலம் இப்போதில் லாமை கருதி, நாம் எப்படி விடுதலை பெறப்போகிருே மென்று எவரும் ஏங்குதல் வேண்டா. தைர்யமும் ஒற்றுமையும் தந்திரமும் சேர்ந்தால் இவற்றுக் கெதிரே கோடி பீரங்கிகள் நிற்பினும் அஃதோர் பொருட்டன்று.

‘டைம்ஸ் ஆப் இந்தியாவின் விகடம்’ பம்பாயில் பிரசுரமாகும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகையின் பிரதிநிதியொருவருடனே பூரீ ஆகாகான் செய்த ஸம்பாஷணை அப்பத்திரிகை யில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/454&oldid=605896" இலிருந்து மீள்விக்கப்பட்டது