பக்கம்:பாரதித் தமிழ்.pdf/455

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 பாரதி தமிழ்

-

டிருந்தது. அதில் பூரீ ஆகாகான் துருக்கி உடம் பாட்டை மாற்றும் விஷயத்தில் இங்கிலாந்து தலைமை வஹித்து நடத்தவேண்டுமென்று சொல்லி யிருந்தார். இப்போது ஆகாகானுடைய இஷ்டப் படியே நடந்துவிட்டதாக அப்பத்திரிகை தன் தலையங்கமொன்றில் ஸ்ந்தோஷச் செய்தி தெரிவிக் கிறது! என்ன நடந்தது? ஆங்கிலேயர் முற்பட்டு மூண்டு வேலை செய்து லேவர்’ உடம்பாட்டின் அநீத நிபந்தனைகளை மாற்றித் துருக்கியை அதன் பழைய பெருமையில் ஸ்தாபித்து விட்டார்களா? அஃதன்று! துருக்கியுடம்பாட்டின் விஷயமாக எதிர் காலத்தில் செய்யவேண்டிய கார்யங்களைக் குறித்து ஆலோசனை செய்யும் பொருட்டு அடுத்த மாளம் லண்டனில் ஒரு ஸ்பை நடத்தப்போவதாகத் தீர் மானித்திருக்கிறார்கள், இதைத்தான் அந்தப் பத் திரிகை ஆகாகானுடைய அபீஷ்ட ஸித்தியாகக் காண்பிக்கிறது! ஆனல் லண்டனில் இந்த ஸ்பை நடத்துவது மிகவும் கெட்ட அடையாளமென்று நான் கருதுகிறேன். ஏனென்றால் ப்ரான்ஸ் மந்திரி களும் இத்தாலி மந்திரிகளும் இவ்விஷயத்தில் துருக்கிக்கு ஒரு வேளை அனுதாபம் செய்யக்கூடும். மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் முதலிய ஆங்கில மந்திரி களோ எப்படியாவது கிரேக்கரின் நட்பைப் பாது காக்க வேண்டுமென்பதிலும், துருக்கியிடமிருந்து பறிக்கப்பட்ட நாடுகளை அதனிடம் மீட்டும் ஒப்பு விக்கக்கூடா தென்பதிலும் ஒ ரே உறுதியாக நிற்கிறார்கள்.

கிறிஸ்தவ நாகரிகத்துக்குக் காவலாளி

வேல்ஸ் தேசத்து லிபரல் மஹா ஸங்கத்தின் நிர்வாக உத்யோகஸ்தருடன் சில தினங்களுக்கு முன்பு மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் ஒரு ரஹஸ்ய ஸ்ம் பாஷணை நடத்தினர். எனினும் இந்தக் கூட்டத்தில்