பக்கம்:பாரதித் தமிழ்.pdf/458

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மணித் திரள் 459

கூடாதா? கூட்டத்தார் அவசரப்பட்டு மனம் பதறி ஏதேனும் செய்திருந்தால் என்னென்ன ஆபத்துக்கள் விளைந்திருக்குமோ யார் அறிவார்? இங்ஙனம் முற்றிலும் விரும்பத்தகாத விரஸமான வழிகளில் ராஜாங்கத்தார் அடக்கு முறைகளை அனுஸ்ரிப்பதி னின்றும் அவர்களுக்கு ஏற்கெனவே தேசத்தி லுள்ள மதிப்புக் குறை இன்னும் மிகுதியுறு மென் பதை அவர்கள் அறியாதது பற்றி வருத்தமடை கிருேம். மேலும் போலீஸார் இப்படி அநாகரிக மாக வேலை செய்த போதுகூட மனக்கொதிப்புக் கிடங் கொடுக்காமல் தலைவர்களின் சொற்படி கேட்டு ஜனக்கூட்டத்தார் அடங்கியிருந்தது நமக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. பொறுத்தா ரன்றாே பூமியாள்வார்?