பக்கம்:பாரதித் தமிழ்.pdf/460

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தீப்பொறிகள் 461

மஹாத்மா காந்தியின் முக்யத் துணைவரில் ஒருவ ராகிய பூரீமான் படேல் அக்ராஸனம் வஹித்தார். முஹமதியச் சிங்கமாகிய மெளலான ஷெளகத் அலியும் அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தார்.

புரீமான் படேலின் ப்ரஸங்கம்

சுமார் 10,000-பீல் (வில்லர்) ஜாதியார் கூடி யிருந்த அக் கூட்டத்தின் முன்பு பூரீ படேல் செய்த அக்ராஸன உபந்யாஸத்தினிடையே பின் வருமாறு பேசினர் :

‘உங்களுடைய குருவை நள்ளிரவில் எழுப்பி ராஜாங்கத்தார் அவருக்கு யாதொரு முன் எச் சரிக்கை செய்யாமலும், அவருடைய குழந்தையைப் பார்க்கக்கூட இடங் கொடுக்காமலும், இரவு ரயில்’ வண்டியில் ஏற்றிக்கொண்டு போய்விட்டார்கள். அவருடைய முக்ய சிஷ்யர்கள் நூற்றுக்கணக்காக அந்த நேரத்தில் அவரோடிருந்தார்கள். எனினும் அவர்கள் அதிகாரிகளைப் பலாத்காரமாக எதிர்க்காம லிருந்ததுபற்றி நான் மகிழ்ச்சி யடைகிறேன். நாம் தார்மிகமான வெற்றி பெறுவோமென்பதற்கு இஃதோர் அடையாளமாகும். பல குற்றங்கள் புரிந்து வரும் இந்த ராஜாங்கத்தாருக்கு நீங்கள் ஆதரவு செய்யும் குணத்தை முற்றிலும் விட்டுவிட வேண்டும். பீல் ஜாதியாரே! நீங்கள் இவ்வுலகத்தில் யாருக்கும் அஞ்சியிருக்கக் காரணமில்லை. உங்களு டைய வேண்டுதல்கள் மிக சொற்பம். உங்களுடைய வாஸ்மோ புலிகளுடனே செய்யப்படுவது. நீங்கள் ஏன் எதற்கும் அஞ்ச வேண்டும்? கட்டாயக் கூலி வேலைக்கு நீங்கள் ஒருபோதும் உட்படக் கூடாது. எது நேர்ந்தாலும் அம்முறைமையை நீங்கள் எதிர்த்துத் தீரவேண்டும்.”