பக்கம்:பாரதித் தமிழ்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 பாரதி தமிழ்

மெளலானு வுெளகத் அலியின் பேச்சு

மாலைக் கூட்டத்தின்போது, அந்த ஸ்மாஜத்தில் ஒத்துழையாமைத் தீ ர் மா ன ம் நிறைவேற்றப் பட்டது. அதை ஆதரித்துப் பேசுகையில் ரீமான் ஷெளகத் அலி பின் வருமாறு பேசினர் :

“என் பீல் ஸ்ஹோதரரைப் பார்ப்பதற் கென்றே நான் விசேஷ ஆவலுடன் இங்கு வந்திருக் கிறேன். ஸ்வதேசத்திற்கும் ஸ்வதர்மத்துக்கும் நீங்க ளெல்லோரும் முழுத் தொண்டு புரிய வேண்டும். தைரியத்தோடிருக்க வேண்டும். மஹாத்மா காந்தி காட்டியிருக்கும் வ்ழியை சிரத்தையுடன் பின்பற்றி யொழுக வேண்டும். மனத் தளர்ச்சி யெய்தி விடா தீர்கள்! ராஜாங்கத்தார் உங்களுடைய குருவைப் பிரித்து விட்ட்து பெரிதில்லை. நமிக்குள்ளே நூற்றுக் கணக்கான குருக்கள் தோன்றப் போகிரு.ர்கள். மஹாத்மா காந்தியைக்கூட அதிகாரிகள் தீவாந்தரத் துக்கனுப்பு வராயின், அல்லது சுட்டுக் கொல்வ ராயின், நம்மிடையே பற்பல காந்திகள் கிளேப் பார்கள். ராஜாங்கத்தார் இதனை அறிந்து நடப் பாராக!’ என்றார். -

3 *

“காத்திக்’ குல்லா

இந்த மாஸம் 3-ஆந் தேதியன்று பேரார் மாகா ணத்திலுள்ள அமராவதி நகரத்தில் டிப்டி கமிஷன ராகிய மிஸ்டர் ஆர். ஏ. வில்ஸன் என்பவருக்கும் அவருடைய கச்சேரியில் குமாஸ்தாவாக வேலை செய்து வரும் பூரீமான் கிர்காம்கார் என்பவருக்கும் நடந்த ஸம்பாஷணை பின் வருமாறு :

மிஸ்டர் வில்ஸன் :-உம்முடைய த லை யி லிருப்பது காந்தி குல்லாவா?”

ழரீமான் கிர்காம்கார் :-ஆம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/461&oldid=605907" இலிருந்து மீள்விக்கப்பட்டது