பக்கம்:பாரதித் தமிழ்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீப்பொறிகள் 463

“மிஸ்டர் வி :--ாறுரீமான் காந்தியின் கொள்கை களையெல்லாம் நீர் அங்கீகாரம் செய்து கொள்ளு கிறீரா?”

பூரீமான் கி :-ஆம்.”

மிஸ்டர் வி - அப்படியானுல் இந்த ராஜாங் கத்தாருக்கு நீர் ஏன் உதவி செய்துகொண்டிருக் கிறீர்?”

பூரீமான் கி :-"பாரத ஜனஸ்பை (காங்க்ரஸ்) இன்னும் ஸர்க்கார் உத்யோகஸ்தர்கள் தம் உத்யோ கங்களை விடும்படி கட்டளை பிறப்பிக்கவில்லை.”

மிஸ்டர் வி :-ராஜாங்கத்தை அழித்துவிட வேண்டுமென்பது பூரீமான் காந்தியின் கொள்கை. அதை நீர் ஆமோதிக்கிறீரா?”

பூரீமான் கி :-ஆம், ஆமோதிக்கிறேன்.”

மிஸ்டர் வி :-"அப்படியாளுல் உம்முடைய வேலையை உடனே ராஜிநாமா கொடுத்துவிட வேண்டும்............ மேலும், எங்கள் ராஜாங்கத்தினிட

மிருந்து ஏறக்குறைய எட்டு மாஸ்ங்களாக நீர் சம்பளம் வாங்கிக்கொண்டு வருகிறீர். அதனுடன், நீர் இப்படிப்பட்ட கொள்கைகள் வைத்துக் கொண் டிருப்பது பொருந்துமா?”

பூரீமான் கி :-"இந்த ராஜாங்கத்துக்கு நான் உதவி புரிந்து வருதல் வெட்கத்துக் கிடமான செய்தியேயாம். ஆனல் நான் சில அவஸ்ரங்களைக் கருதி அங்ஙனம் செய்ய நேர்ந்தது. எனினும் எனது தேசத்தின் ஆணை தோன்றுமிடத்தே நான் இந்த உத்யோகத்தை விட்டுவிடக் காத்திருக்கிறேன்.”

மிஸ்டர் வி :-"நீர் அந்தக் குல்லாயை மாற்ற ஸ்ம்மதப்படுவீரா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/462&oldid=605909" இலிருந்து மீள்விக்கப்பட்டது