பக்கம்:பாரதித் தமிழ்.pdf/463

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 பாரதி தமிழ்

பூரீமான் கி :-"மாட்டேன்.”

மிஸ்டர் வி :-"உம்முடைய தைர்யத்தை மதிக் திறேன். எனினும், இந்த விஷயத்தைக் குறித்து இன்றிரவு யோசனை செய்து பார்த்து, அப்பால் ಹಿ உம்முடைய நிச்சயத்தைத் தெரிவிப் ரா.க.’

மறு நாள் காலையில், பூரீமான் கிர்காம்கார், மிஸ்டர் வில்ஸனிடம் தம்முடைய ராஜினமாக் கடிதத்தைக் கொடுத்துவிட்டார்.

‘திண்டாமை’ என்ற பாதகம்

தேசபக்தி யென்பது நம்மவருக்கு அன்னியரால் நேரும் தீண்டாமைகளை மாத்திரம் ஒழிக்கும் இயல் புடையதன்று. நமக்கு நாமே செய்துகொள்ளும் அநீதிகளையும் நீக்குமியல்புடையது. எனவே தேச பக்த சிகாமணியாகிய மஹாத்மா காந்தி நாம் இன்னும் ஒன்பது மாலங்களுக்குள்ளே ஸ்வராஜ்யம் பெற்று விடுவோமென்று சொல்லிய போதிலும், அதற்கொரு முக்யமான நிபந்தனை சொல்வதை நாம் கவனிக்க வேண்டும்.

தம்முடைய யெளவன இந்தியா’ பந்திரிகை யில் மஹாத்மா பின் வருமாறெழுதுகிருள்:- சில வகுப்பினரைத் தீண்டாதவராகக் கருதும் பாவத்தை ஹிந்துக்கள் அகற்றினலன்றி, ஸ்வராஜ்யம் ஒரு வரு ஷத்திலும் வாராது? நூ று வருஷங்களிலும் வாராது...ஹிந்து மதத்தின் மீது படிந்திருக்கும் இந்தக் களங்கத்தை நீக்குதல் ஸ்வராஜ்யம் பெறுதற் கவசியமாகு மென்ற தீர்மானத்தைக் காங்க்ரஸ் ஸ்பையார் நிறைவேற்றியது நன்றேயாம்....மேலும் இந்தத் தீண்டாமை யென்பது மதக் கொள்கை