பக்கம்:பாரதித் தமிழ்.pdf/468

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைகள் 469

தலைவர்களில் இந்தக் காசி நாடான் ஒருவன். இவனுக்கு இப்போது வயது இருபத்து மூன்று இவனைப் ப்ோலீஸார் கைதியாக்கிய ஸமயத்தில் இவன் சொல்லிய வார்த்தைகள் பின்வருவன: “ஹா! நீ வைத்திருப்பது போன்ற கைத் துப்பாக்கி யொன்று மாத்திரம் என்னிடம் இருந்தால் நான் திருவாங்கூரை ஆளுவேன்’ என்றாம்ை. திருநெல் வேலிக் கள்வரிடையேயும் பல அலெக்ஜாந்தர்கள் இருக்கிரு.ர்கள்!

பெர்லின் நகரத்தில் இந்தியன் கொலையுண்ட மாயம்

சென்ற மாஸம் (ஜனவரி) 23-ஆந் தேதியன்று பெர்லின் நகரத்திலிருந்து லண்டன் டைம்ஸ்’ பத்திரிகைக்கு வந்திருக்கும் தந்தி யொன்றில் ஸிங் என்ற இந்திய இளைஞனொருவன் கொலையுண்ட விஷயத்தைக் குறித்து பெர்லின் நகர் முழுதிலும் பெருங் கலக்கமேற்பட்டதாகத் .ெ த ரி கி ற து. விஷயம் ஜெர்மன் போலீஸாரின் விசாரணையிலிருக் கிறது.

“ஜெர்மனியிடம் நட்புக் கொண்ட இந்தியர் களின் ஸ்பை” என்பதாக பெர்லினில் ஒரு ஸ்பை இருக்கிறது. அந்த ஸ்பையார் இந்தியாவில் உள்ள ப்ரிடிஷ் ஆட்சி ஸ்பை முறைக்கு விரோதமாக ஜெர்மனியிலே கிளர்ச்சி செய்து வருவ்தாக லண் டன் “டைம்ஸ்’ நிருபர் சொல்லுகிறார். அது ஆரம் பித்து நெடுங்காலமாகவில்லை. சென்ற (1920-ஆம்) வருஷம் டிஸம்பர் மாஸம் 7-ஆந் தேதியன்று அந்த ஸ்பை ஜெர்மன் அதிகாரிகளின் அனுமதியுடன் திறக்கப்பட்டது. அந்த ஸ்பைக்குத் தலைவரின் பெயர் எமீர்தேகிப் அர்ஸ்லான். இவர் மஹா யுத்தம் தொடங்கிய காலத்தில் துருக்கிப் பார்லிமெண்டில்