பக்கம்:பாரதித் தமிழ்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாரதியார் வாழ்க்கை வரலாறு 47

கட்டுரைகளாலும் ஒருவேளை கிடைத்திருக்கக்கூடிய பணமும் தவிர அவருக்கு வேறு வருவாய் இல்லை.

எங்கேனும், எப்படியேனும் பணம் கண்டு பிடித்து ஒரு நண்பன் பெயர்ால் நமக்கனுப்புக. தம்பி, உனக்கேனடா இது கடமை என்று தோன்ற வில்லை?’ என்று 1915 ஜூலை 19-ல் பரலி நெல்லையப் பருக்கு அவர் எழுதியுள்ள கடித வாக்கியத்தில் பாரதியாருடைய பணமுடை மறைந்து நின்று மிக நன்றாகத் துன்பக் கோலத்தில் காட்சியளிக்கிறது.

ஆனல் பாரதியாரின் புதுச்சேரி வாழ்க்கை எல்லா அம்சங்களிலும் துன்பம் நிறைந்திருந்ததாக யாரும் நினைக்கக் கூடாது. அவருக்கு இரண்டு பெரிய மஹான்களின் தொடர்பும், நட்பும் அங்கே கிடைத் தன. கலியப்தம் 5011 பங்குனி 21-ந் தேதி (1911 ஏப்ரல் 3) பூரீ அரவிந்தகோஷ் புதுவைக்கு வந்தார். வந்த வகையில் ஐந்தாறு மாத காலம் அவர் கோமுட்டித் தெருவில் பூரீமான் சங்கர செட்டியார் வீட்டில் தங்கியிருந்தார் (பால பாதி). பூரீ வ. வெ. சு. ஐயர் இவருக்குச் சற்று முன்பே வந்துசேர்ந்திருக்க வேண்டும். லண்டன் நகரத்தில் இந்திய விடுதியி லிருந்த மதன்லால் திங்கிரா என்னும் இளைஞன் 1909 ஜூலை 1-ஆம் தேதி கர்சான் வில்லி என்ற ஆங்கிலேயனைச் சுட்டு வீழ்த்தினன்; தானும் சுட்டுக் கொண்டு உயிர் துறந்தான். உட்னே இந்திய விடுதியி லிருந்த சவர்க்கார், வ. வெ. சு. ஐயர் முதலியோ ரைக் கைது செய்ய ஏற்பாடாயிற்று. சவர்க்கார் பிடிபட்டார். ஐயர் மாறு வேடம் பூண்டு தந்திர மாகப் பல விபத்துக்களைச் சமாளித்துக்கொண்டு புதுச்சேரி வந்தடைந்தார்.

தேசபக்தியின் காரணமாகவே மூவரும் புதுச் சேரியிலே தஞ்சம் புக நேரிட்டது. பூரீ அரவிந்தர், ஐயருடைய கூட்டுறவு பாரதியாருக்குப் பெரிதும்